இந்த கதையைப்படிக்கும் முன் 'சிங்கப்பல் - பாகம் ஒன்று' கதையைப் படிக்கவும் ....
------------------------------------------------------------------------------
ரெண்டு மாதங்களுக்குப்பிறகு நேற்று மீண்டும்
அவளைப்பார்த்தேன். எப்படிப்பார்த்தேன் எங்கு
பார்த்தேன் என்று சொல்வதற்கு முன்னாள் இந்த
நாட்களில் என்னன்ன மாறுதல்கள் என்பதை
சொல்லி விடுகிறேன் (நன்றி).
ராம் இந்தியா சென்றுவிட்டான், அவனுக்கு
ஒரு வாரத்தில் கல்யாணம். அவனின் காதல்
மற்றும் அது சார்ந்த சில்மிஷங்கள் இனி
வழக்கிழந்து போகும் என்பது காதலைப்பற்றி
பெரிய அபிப்பிராயம் இல்லாத எனது நம்பிக்கை.
காதலில் நம்பிக்கை இல்லாதவன் பின்
எதற்காக இந்த கதையை இப்படி சிலாகித்து
எழுத வேண்டும். அதையும் பின் சொல்கிறேன்
தனிமை ரொம்பவும் பிடித்து போனது. நிலவை
பற்றியெல்லாம் சுமாரான மூன்று கவிதைகள்
கூட எழுத முற்பட்டு நிறுத்தி கொண்டேன்
(நிலவும் நீங்களும் தப்பித்தீர்கள்). நான்
முதலில் சொன்ன அந்த மாற்றம் இதுவும் தான் ...
சில உணர்வுகளைப்பற்றி (பெண், காதல் சார்ந்த )
நான் தீவிரமாக கொண்ட நம்பிக்கைகள் சிறு
பரிணாமம் காண துடித்தது.
ஒரு விஷயத்தைப் பற்றி இதுவரை ஒரு மணி
நேரத்திற்கு மேல் சிந்தித்தது கிடையாது, ஆர்குட்
பார்க்க உட்கார்ந்து விடுவேன், ஆனால் என்னை
ஆட்கொண்ட இந்த இனிமையான வலி தன்
பிடியை வலுக்கிறது.
நான் கொண்ட இம்மாற்றம் உண்மையான காதலா
அல்லது அவள் மேல் உண்டான உடல் சார்ந்த
பாலுனர்வா அல்லது காதல் கொண்டேன் என்று
'எனக்கு நானே' கூறிக்கொள்ளும்
கர்வமா என்று கடந்த நொடி வரை எனக்கு
விளங்காத விடுகதை. பருவம் தெரிந்த நாள் முதலாய்
கடைப்பிடித்து வந்த நம்பிக்கை (அவநம்பிக்கை
என்று கூட சொல்லலாம்) என்னுள் சிறகடித்த இந்த
சிறிய மாறுதலால் பலவீனம் ஆகிவிடக்கூடாது என்று
சிறிய பதற்றம் வேறு.
எது எப்படியோ, மறுபடியும் அவளைப் பார்க்கும் அந்த
நல்ல சந்தர்ப்பம் நிச்சயம் ஏற்படும். அப்பொழுது
பார்த்துக்கொள்ளலாம். இப்படியே ஒவ்வொரு இரவும்
தூங்கச்செல்லும் முன் எனது டைரியில் எழுதி தூங்க
சென்றேன். .
ஒரே ஒரு முறை அவளைப்பார்க்க வேண்டும்,
குறைந்தபட்சம் நான்கு கேள்விகள் கேட்க வேண்டும்
(இன்னும் கேள்விகளை முடிவு செய்யவில்லை),
அவளை கண்ணுக்கு கண்ணாக அணுக வேண்டும் ,
ஏதாவது ஒரு ஜோக் சொல்லி அவளை வீழ்த்தி
சிங்கப்பல்லை ரசிக்க வேண்டும் இப்படி பல
'வேண்டும்'கலை மனதில் ஏற்றிக் கொண்டு
நேற்று ஆபிஸ் செல்ல காரில் ஏறும் பொழுது தான்
என் பக்கத்துக்கு ப்ளாட்டிற்கு புதிதாய் ஒரு குடும்பம்
குடி புகுந்ததை கவனித்தேன். . கணவன் மனைவி
மற்றும் ஒரு பெண் குழந்தை என இந்த காலத்தின்
கூட்டுக்குடும்பம்.
பேச நேரம் இல்லை, வாரக்கடைசியில் பார்த்துக்கொள்ளலாம்
என தொடர்ந்தேன்.
நாள் முடிந்து இரவு தாமதமாய் வந்த பொழுது அந்த
வீட்டில் ஏதோ பார்ட்டி போல தெரிந்தது.
எல்லாம் தமிழில் டாக் செய்து கொண்டிருந்தார்கள்
(Did u get a chance to read பிரிவோம் சிந்திப்போம் ...
awesome maami ... just $18 @ amazon.com) என்று இளம்
குடும்பத்தலைவிகள் சக வயதை ஒட்டிய இல்லத்தரசிகளுடன்
தங்கள் இலக்கிய ரசனையையும், புதிதாய் வாங்கிய போர்ட்
காரைப்பற்றியும், தங்கள் பிள்ளைகள் கர்நாடிக் சங்கீதம்
பயில்வதைப்பற்றியும் (எவ்வளவு பற்றி)
அலட்டிக்கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் இரும்மிக்கொண்டு என் வீட்டு சாவியை
திறக்கப்போகும் பொழுது யாரோ "ஹலோ" என்று
கூப்பிடுவது காதில் பாதி விழுந்தது.
ஆச்சரியம் என்று ஒரே வார்த்தையில் என் உணர்வை
சொல்லிவிட விருப்பம் இல்லை. அதிர்ச்சி என்றால்
அதுவும் இல்லை ... ஸ்தம்பித்து நின்றேன் என்று
வேண்டுமானாலும் சொல்லலாம் ...
"ஹலோ ... வாட் எ சர்ப்ரைஸ் ?" என்று உற்சாகம்
பொங்க கத்தினாள்
"...."
"ஹலோ .. என்ன அதுக்குள்ள மறந்து போச்சா?"
"இல்ல ... இல்ல ... நீங்க ... வந்து"
"என்ன அதுக்குள்ளே மறந்துட்டீங்க ? பாரத் பஜார் ...
காய்கறி ... உங்க ஊரு மதுரை? கரெக்க்டா?
என்னைப்பற்றி எல்லாம் சொல்கிறாள் என்ற சிந்தனை
கூட இல்லை ... நான் அவளையே பார்த்துகொண்டிருக்கிறேன்.
"ஒ ... ஒகே ... ஞாபகம் இல்லையா ... என்ன சார்,
நான் என்ன சொல்லி ஞாபக படுத்தனும் சொல்லுங்க? "
உன் சிங்கப்பல்லை காண்பித்து அழகாய் இருநூறு
முறை சிரித்துக் காண்பி என்று ஒரு நிலையில்
இருந்தால் சொல்லி இருப்பேன். ஆனால் நான்
என் கட்டுப்பாட்டில் இல்லை.
"எஸ் ஞாபகம் வந்துடிச்சி ... நீங்க சுவாதி தான?
"வாவ் அப்பாடா ... உங்க பேரு தான் ஞாபகம் இல்ல ... "
"நான் என் பேரே சொன்னதில்லையே உங்க கிட்ட ..."
என் வாய் மட்டும் ஏதோ பேசிக்கொண்டிருக்க
எப்படி ஆரம்பிக்கலாம் என்று மனதில் ஆயிரம்
சிந்தனைகள்.
"சுவாதி , நீங்க ... எங்க இருந்தீங்க இவ்வளவு
நாளா?"
முதல் கேள்வியை தட்டுத்தடுமாறிக் கேட்டேன்.
"நான் வந்து ஆக்சுவலா ... "
அதற்குள் "சுவாதி, ரொம்ப டைம் ஆயிடிச்சு ...
கெளம்பு சீக்கிரம். சார், இப் யூ டோன்ட் மைன்ட்
(If you dont mind)"
என்று ஒரு பெரிய உருவம் இடைமறித்தது.
உங்கள் யூகம் சரி தான், அது அவளது கணவர் தான்.
"ஜஸ்ட் ஒரு நிமிஷம் அஸ்வின் ... சார் உங்க பேர்
என்ன சொன்னீங்க?"
"ரமேஷ்"
"ரமேஷ் ... சாரி, இங்க எங்க ஹஸ்பண்டோட
கலீக் (colleague) வீட்டுக்கு பார்ட்டிக்கு வந்திருந்தோம்,
வந்த இடத்துல ரொம்ப லெட் ஆயிடிச்சி ... ஒரு மணி
நேரம் முன்னாடியே கிளம்பி இருக்கணும். நாளைக்கு
காலைல காலேஜுல ஒரு செமினார் வேற இருக்கு ...
so ... இன்னொரு நாளைக்கு வி ஷால் மீட் (we shall meet).
என் பதில் எதிர்பார்க்காது திரும்பி சென்று கொண்டிருந்தாள்
அவள் கணவரின் கையை கெட்டியமாய் பிடித்துக்கொண்டே.
அவளின் முயல் போன்ற அந்த சிறிய ஜடை இந்த பக்கமும்
அந்தபக்கமும் ஆடிக்கொண்டிருந்த அழகை
ரசித்துக்கொண்டிருக்கும்போதே எனது இடது விழியில்
கண்ணீர்.
நான் எப்படி இதை எடுத்துக்கொள்வது என்று எனக்குப்புரியவில்லை.
நேற்று ஒரே முறை அழுதேன், பின் அதுவும் இல்லை.
அவளைப்பற்றி நினைக்காமல் இருக்கவும் முடிவதில்லை.
மின்னல் என்று சொல்வார்களே, அப்படி என்
வழிபாதையில் குறிக்கிட்டு மறைந்தும் விட்டாள்.
அவள் ஏற்படுத்தியதைப்போல நான் அவளுள் எந்த
உணர்ச்சி மாற்றத்தையும் உண்டாக்கவில்லை என்ற
தாழ்வு மனப்பான்மை வேறு எட்டிப்பார்க்கிறது.
அவளுக்கும் எனக்கும் நடுவே ஏற்பட்ட இந்த சிறிய
அத்தியாயத்தை நினைத்துப்பார்த்தால் ஒரு வாரத்தின்
பயணமும் மூன்று ஜோக்குகளும் நான்கு சாரிகளும்
மூன்று தாந்க்ஸ்கலும் மிஞ்சும் .,.. ஆனால் அந்த நினைவுகள்
உருவாகிய புதிய வடு ஆற கொஞ்ச நாட்கள் ஆகும். மீண்டும்
சந்தித்ததற்கு நல்ல காரணம் உண்டா என்று தெரியவில்லை,
ஆனால் அவள் விஷயத்தில் ஒரு தெளிவு உண்டாக வழி
உண்டென்றால் அதற்கு இது ஒரு சதவிகிதமாவது உதவும்.
டைரியை மூடி விட்டேன். தூங்கசென்றேன்.
விடிந்தது. மீண்டும் சனிக்கிழமை இன்று
கடைக்குச்செல்கிறேன்.
வட இந்திய மாமி இன்று காணவில்லை. பூஷஙிக்கை
முருங்கக்காய் வாங்கி பில் போடும் இடத்திற்கு வந்தால்
அங்கே வேறு ஒரு புதிய பெண்.
"ஹலோ ... "
பதிலுக்கு அவளும் ஹலோ சொல்லிவிட்டு
"ஆர் யூ தமிழ்" என்று கேட்டாள் ஆர்வம் பொங்க
இந்த முறை "நோ" என்று சொல்லிவிட்டு வீடு திரும்புகிறேன்.
Friday, July 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment