____________________
மார்கழிக் குளிரில் நனைந்து
படுத்திருக்கும் அனாதைப் பிணம்
____________________
திடீர் உத்தமர்கள்
சாலையில் பதற்றம்
அமெரிக்க போலிஸ்
____________________
கொள்ளை அடிக்க வந்தவன்
கவனிக்கவில்லை போர்டில்
'வேலை காலி இல்லை'
____________________
வெயில் கொஞ்சம் அதிகம்
ஊஞ்சல் ஆடுகிறது
நாளையும் ஆடும்
____________________
வரி கட்ட வேண்டும்
வோட்டு போட வாங்கிய காசிற்கு ...
2020
____________________
சிதறிய கண்ணாடி
பெருக்கெடுக்கும் ரத்தம்
ஓயாமல் பாடும் எப்.எம்
____________________
மூடிய கண்கள்
இருண்ட உலகம்
கருப்புப் பூனை
____________________
Monday, May 24, 2010
Sunday, March 28, 2010
கொல்லும் இச்சை
கொல்லும் இச்சை ...
----------------------------------------------------------
கொல்லும் இச்சை என்று சொல்லிக் கேள்விப்
பட்டதுண்டா? கொல்வதில் என்ன இச்சை என்று
கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது, ஆனால்
செய்து காண்பிக்க முடியும். குறைந்த பட்சம் ரெண்டு
நம்பிக்கை துரோகம், குற்ற உணர்ச்சி இது
எதுவும் நீங்கள் இது வரை கண்டதில்லை
என்றால் உங்களுக்கு இந்த கதை, என் கதை
புரியாது. புரியாதவர்களின் வகையறா தான்
நானும் டிசம்பர் 21 ஆம் தேதி வரை.
அன்று தான் கமலம் என்ற பெண்ணை
நான் பார்க்கிறேன். எனக்குக் கல்யாணத்திற்குப்
பார்த்த பெண். அவளின் நினைவுகள் கடந்து செல்லும்
போதெல்லாம் இப்படித் தான் பற்களைக் கடிக்கிறேன்.
காதலிக்கிறேன் என்று மாய்ந்து மாய்ந்து சொன்னவள்
கடைசி நிமிடத்தில் பிடிக்கவில்லை என்று
சொல்லி விட்டாள். காரணம்
"ஒரு ஆணுக்குரிய கம்பீரம் இல்லையாம்" ....
ஒரே ஒரு அரை, அதற்கு மேல் என் நாகரிகம் என்
கோபத்தை தடுத்து விட்டது முதற் கதை.
பின் ஜனவரி மாதம், மார்கழிக் குளிரில் ஆபிசிற்கு
காரில் செல்கையில்அண்ணன் போன் செய்கிறான் ...
புதிதாக ஒரு பெண் ... பதினொன்றிற்கு ஒன்பது \
பொருத்தம் உள்ளதாம்., வசியப் பொருத்தம் தவிர ...
பெயர் ஊர்மிளா ...
அதே காதல்கள் ... முத்தங்கள் ... இந்தியா வருகிறேன் ...
ஐ லவ் யூ என்கிறாள் ... நேரில் பார்க்கும் பொழுது
அழுது சொல்கிறாள் ... "இவரப் பார்த்தா ஏதோ ஒரு
நம்பிக்கை வரல, இவர நம்பி அமெரிக்கா போனா,
என் எதிர்காலமே கேள்விக் குறி ஆயிடும் ...
ஐ யாம் சாரி"
இந்த முறை அரை கொடுப்பது போர் அடித்து
விட்டது. இருபது நிமிடம் ராயபுரம் தமிழில் அவளை
உமிழ்ந்து அவள் வம்ச விருத்தியை சபித்து ...
பற்களைக் கடித்து ... அடங்கியது கோபம் ...
இரண்டாம் கதை ...
இன்று மெரினாவில் சனிக்கிழமை இரவில்
தனியாக இருக்கும் பொழுது இந்த கதை எழுத
ஏதோ ஒரு ஆதாரக் கோபம் காரணமா அல்லது
யாரிடமாவது என் கோபத்தின் மகத்துவத்தைச்
சொல்ல விருப்பமா என்று தெரியவில்லை ...
தோல்வி அடைவிதிலும் அதை விவரித்துச்
சொல்வதிலும் ஒரு இச்சை இருக்கிறது ... அதை
சொல்லிமுடிக்கும் பொழுது ஏழு மடங்கு
ஆண்மை வெளிப்படுகிறது . என் கண் முன்னால்
கடற்கரையில் கட்டிலறை சில்மிஷ சாகச நிகழ்வுகள்
அரங்கேறும் பொழுது, ஏன் கோபத்தில் கோணலாய்ச்
சிரிக்கிறேன், ஏன் பற்களைக் கடிக்கிறேன் என்று
புரியவில்லை ... தாழ்வு மனப்பான்மையா,
இல்லை உண்மையில் கலாச்சாரத்தின் மேல்
பற்றுள்ளதா தெரியவில்லை ... ஆனால் கடுங்கோவம்
வரும் பொழுது நான் ஆதி மனிதன் ஆகிறேன் என்று
மட்டும் ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
"அண்ணா சுண்டல் வேணுமா" ஆடை கிழிந்த 11
வயது சிறுமியை முறைத்ததில் அவள் லேசாய்
பயந்து நகர்கிறாள். என் முதல் வெற்றி.
தூரத்தில் ஒரு வளப்பமான நடுத்தர வயது பெண்
நான்கு பேருடன் சும்மா உட்கார்ந்து விட்டு,
என்னருகில் வருகிறாள்.
"என்ன சார்?" என்கிறாள் நாக்கின் ஓரம் இருந்த
வெற்றிலைப் பாக்கு கறையைத் துடைத்துக் கொண்டே.
"அதெல்லாம் வேணாம் போம்மா"
"இன்னா சார் ... சொம்மா பத்து நிமிஷம் தான் ...
சொல்றியா ... டயம் ஆவுது"
"அடிங் .... போம்மா ... அரிப்பு எடுத்தா அங்க பாரு
அந்தாண்ட போ ... "
"தா ... வேணும்னா சொல்லே ... தோ
அங்கத்தான் குந்தினிருப்பேன்... வக்கிருந்தா வா ...
அத உட்டு திட்னே தா டகுலாயிடும்"
அவளுக்கு ஏன் இந்த வீம்புக் கோபம். அவள் கோபம்
அவளின் தேவைக்கும் அவள் தொழிலுக்கும்
உதவுவதில்லை. சொல்லப் போனால் "அரிப்பு" என்ற
வார்த்தை அவளின் பெண்மையையும், சுயமரியாதையையும்
நான் பரிகாசம் செய்தேன் என்பதற்காக கோபப்பட்டாள்
என்று சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள
முடியாது. ஒரு வேளை இந்த வீம்புக் கோபம்
தான் அவளின் முதலீடா என்று கூட தெரியவில்லை.
அவளின் கோபம் எனக்கு ரொம்பவும் பிடித்தது.
பற்களை நான்கு முறை கடிக்கிறேன்.
புடவையை கீழ்பகுதியில் சரி செய்து விட்டு
என்னை விட்டு எதிர் நோக்கி விலகும் வேளையில் ...
"ஏய் ... இந்தாண்ட வா" என்று அவளை
அதட்டிக் கூப்பிடுகிறேன். ஆண்மை தலைக் கேருகிறது.
"அதானே பாத்தேன் ... நம்ம ராசி அப்படி"
என்கிறாள்.
"ம** ராசி ... ஏண்டி நீ செஞ்சுனிக்கிற வேளிக்கு
உனுக்கு இன்னாடி ராசி ... அடிங் ... "
"யோவ். .. மேடம் ராசி நம்முல்து ... மாசி மகம் ...
தெர்தா ... நைனா கொடுங்கையூர்ல சோசியம்
பாப்பாரு ... இன்னாயா டர்ராக்குறியா ... வேக்குது"
என்று சொல்லி மேலாடையை வைத்து என்
நெற்றியை விகல்பமில்லாமல் துடைக்கிறாள். ஊர்
பார்த்த அழகை ரசிக்க எனக்கு இப்பொழுது ஸ்ருங்கார
உணர்ச்சி வெளிப்படவில்லை ... கொல்லும் இச்சை ...
இன்னமும் அதே இச்சை ...
அவளைப் பிடித்து தள்ளி ... "வேண்டாம்" என்கிறது
மனது.
"இன்னாயா ... வேணாவா?"
"இல்ல ... பொது இடாமாக்குதே ... அதான்"
"தோடா ... யோவ் ... நானே பொது எடம் தான் ...
என் சர்வீஸ் தெரியுமா ?" என்கிறாள் திமிராய்.
அதைக் கேட்ட நொடியில் அவள் முடியைப் பிடித்து
இழுத்து என்னருகில் முகத்தோடு முகமாக வைத்துச் சொல்கிறேன்.
"நான் டெண்சனாக்குரேன் ... ஏதாவது படகுக்குதா?"
"யோவ் ... இன்னாயா நம்சலாப் போச்சு ... சொம்மா
பத்து நிமிஷம் முடிச்சியா இல்லாயான்னு இல்லாம ...
இவருக்கு படகு வேனும்மாம் ... கப்பல்
ஒனுமாம் அடிங் ... வேற ஆளப் பாரு" என்று என்
கையை உதறிக் கிளம்புகிறாள்.
என் இச்சை தணியும் நேரம் நெருங்கிவிட்டது.
சுற்றும் முற்றும் பார்க்கிறேன். யாருமில்லை.
மணி ஒன்பது. கும்பகோணத்தில் நான் வளர்ந்த
ஆச்சாரமான குடும்பம், ப்ளஸ் டூவில் ஸ்கூலில்
பர்ஸ்ட், அமெரிக்காவில் நான் பார்க்கும் கிரீன் கார்ட்
உத்தியோகம், என் தங்கையின் எதிர்காலம் ...
எதுவும் நினைவிலில்லை ... உம் ஊம் .... என்
குறிக்கோள் இப்பொழுது இவளை வெல்வது ...
வென்று தணிப்பது ... ஏற்கனவே இரு பெண்களால்
தோற்கடிக்கப்பட்டுவிட்டேன் . இந்த சந்தர்ப்பத்தை
விடுவதாய் இல்லை.
சித்திரைக் காற்றுடன் அமாவாசை இரவு ஒளிர ...
"யோவ் ... இன்னாயா ... ஆம் ... சரி சரி ...
ஸ்டார்ட் ம்யூசிக்" என்கிறாள் கிண்டலாய்.
இனி நான் தோற்பது இல்லை. என் இச்சை
இவளைக் காமம் கொண்டு அழிப்பதில் தீர்ந்து விடுமா
என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை,
தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை, ஆனால்
இவளை இந்த நொடியே ... கண் மூடிய நிலையில்
தன் உடம்பை லேசாய் தயார் செய்தவள் என்
பிரயத்தனத்திற்க்காக காத்திருக்கிறாள்.
அந்த நொடியில் அவள் அரைக் கண்ணால்
குறும்பாய் பார்த்து சிரிக்கும் பொழுது ...
சிங்கப்பல் ... நினைவுகள் அத்தியாவசக்
கோபத்தைக் குறைப்பது போல ... காமம்
கழிந்து காதல் பிறந்தது போல என்னை எங்கோ
இழுத்துச் செல்கிறது ... எனக்குப் பிடித்த சிங்கப்பல் ...
எனக்குப் பார்த்த அந்த இரண்டு பெண்களின்
போது அம்சம் ... இடது
ஓரத்தில் சிங்கப்பல் ... பற்களைக் கடிக்கிறேன் ...
முடியவில்லை ... ஏதோ ஒரு எண்ணம், தென் மேற்கு
மூளைப் பகுதியில் வெகுண்டு எழுந்து மறைகிறது.
அவள் அடுத்த நிமிடம் நிகழப் போகும் பழக்கமான காரண
காரிய வைபோகத்திற்கு காத்திருக்கிறாள்.
இதைக் காமம் என்பதா, கற்பழிப்பு என்பதா ... என்
இச்சை தீரும் வரை அவளுடன் ... கண் மூடி
இருக்கிறாள் ... வேறு உலகத்தில் மெய் மறந்து
இருப்பதாய் நினைத்துக் கொள்கிறேன் ... மூன்று முறை ...
நான் கண்டிராத, எனக்கு நேராத, கற்பனையிலும்,
படுக்கையிலும், குளியரையிலும் நான் பதினைந்து
ஆண்டுகளாக உருவகப் படுத்தி வைத்த ஆண்மையின்
வெளிப்பாடு இன்று என் கண் முன்னால் அரங்கேறுகிறது.
கிரிசைகள் முடிந்தவுடன் இவளைக் கொன்று
விட்டால் என்ன? வேண்டாம் ... அது அவசியமில்லை ...
இவளின் தொழிற் முறை பெண்மையை நான் இந்த இரவில்
கடைசியாய் சூறையாடிக் கெடுத்தவன் என்ற பெருமை போதும் ...
என்னின் கடுங்கோவத்தின் தாக்கத்தில் அவள் நான்கு நாள்
வேறு யாருடனும் உறவு கொள்ளக் கூடாது ... அவளே
எனக்கு பணம் தந்து நன்றி சொல்லி பணிவிடை
செய்து கிளம்ப வேண்டும் ... இதோ மற்றும் ஒரு
முறை ... அலட்சியம் செய்த ஊர்மிளாவும்,
கமலமும் அதோ அந்த அமாவாசை கோர அலையில்
அடித்துச் செல்வது போல ஒரு குரூர எண்ணம் ...
அருகில் யாரும் இருந்தார்களா என்பதெல்லாம்
பொருட்டில்லை ... இவளை இன்று விடுவதாய்
இல்லை ... இவளின் புருஷனைக் கூட இவள் இன்று
காரி உமிழ வேண்டும் ... என் ஆளும் தன்மை
இவளுக்குத் தந்த அந்த தணலில் இவள் பொசுங்கி
வெந்து இந்த தொழிலையே விட வேண்டும் ...
நான் அடுத்த முறை கடற்கரைக்கு வரும்
பொழுது எல்லாப் பெண்களும் என்னைத் தேடி
வர வேண்டும் ... இச்சை அடங்க மறுக்கிறது ...
உலகின் எல்லா யுவதிகளும் இந்த நொடியில்
கிள்ளுக் கீரை ஆகிறார்கள் ... எல்லாரும் எனக்கு
அடிமைகள் ... இந்த விலைமாது தான்
என்னைப் பொறுத்த வரை உலகப் பெண்களின்
பிரதிநிதி ... மற்றும் ஒரு முறை ...
மழை வருவது போன்ற ஒரு உணர்வு ...
வந்தால் என்ன ... பூகம்பமே வந்தாலும்
இவளை இன்று ஒரு வழி செய்து, இவள்
மறு ஜென்மம் வரை என்னால்
கற்பழிக்கப்பட்டவள் என்ற அடையாளத்துடன்
வாழ வேண்டும் ... அப்படி இவள் மேல்
என்ன பெருங்காமம்?
சிங்கம் மானை அடைவதிலும், பாம்பு
தவளையை விழுங்குவதிலும் உள்ள வேட்டையை
வேட்கை என்பதா இல்லை பிறவிக் குணம் என்பதா?
அப்படி என்றால், இது தான் நானா? நான்
எழுதும் ஜாவா ப்ரோக்ராமிலும், வயலின்
இசைப்பதிலும், என் அம்மாவிடம்
பாசமாய்ப் பேசுவதிலும், வெளிப்படாத நான்,
ஜெகநாதன் என்னும் நான் நானாக வாழ்வது இந்த
ஷன நேரத்தில் தானா? இன்னும் என்ன
செய்து கொண்டிருக்கிறேன் ... அவளின்
வெற்றிலைப் பாக்கு உதட்டைக் கடிக்கிறேன் ...
ரத்தம் வெளிப்படுகிறது ... அவள் ஆனந்த
நிலையை அடைந்தவளாய் கிடக்கிறாள் ...
இல்லை, என்னுடைய செய்கூலிக்கு இந்த
சேதாரம் குறைவு தான் ... இவளை
ஏதாவது செய்ய வேண்டுமே ...
என் வெறி அடங்க வில்லை ... என்
உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் தாழ்வு
மனப்பான்மை அகங்காரமாக மாறுகிறது ...
இரண்டு பெண்கள் ... நம்பிக்கை துரோகம் ...
அலைக்கு மிக அருகே நான் ... தூரத்தில்
ஏதோ வெளிச்சம் ... தண்ணீரில் இவளுடன்
உறவு கொண்டால் என்ன ... நீச்சல் தெரியாது ...
கவலையுமில்லை ... முகத்தை அந்தப் பக்கமாய்
திருப்பும் பொழுது சிங்கப்பல் மறுபடியும்
தெரிகிறது ... போதும் ...
முடிவு செய்து விட்டேன். அடுத்த நிமிடம்
இவளைக் கொன்று திரும்பிப் பார்க்காமல்
வீட்டிற்கு சென்று நாளை அமெரிக்கா
புறப்பட வேண்டும் ... அடுத்த வார
தினமலரில் அடையாளம் தெரியாத
இவளைப் பற்றி ஒன்பதாம் பக்கத்தில்
சின்ன எழுத்தில் குறிப்பிடப் பட்டதை
நான் இணைய தளத்தில் படித்து புளகாங்கிதம்
அடைய வேண்டும் ... அது தான் என்
வாழ்வின் தலையாய லட்சியம் ... இனி
எந்தப் பெண்ணும் என் ஆண்மையைப்
பரிகாசம் செய்தால் அவளுக்கும் இதே கதி
தான் ... நான் இன்று கற்கால மனிதன் ...
உடையில்லை, பதவி இல்லை, வீண்
அலங்காரம் இல்லை. மொத்த உடம்பிலும்
மிஞ்சியது அடங்காக் காமமும் ஆண்டு
அடங்க மறுக்கும் கோபமும் ... இனி
ஒரே ஒரு முறை இவளை வீழ்த்தி விடை
பெற வேண்டியது தான் ... மழை நீர்
மேலே படுவது போன்ற உணர்வு ...
உதடோடு உதடாக நான் செல்கையில் ...
"யோவ் ... இன்னாயா ... எவ்வளவு
நேரமா படுத்துனிருப்பேன் ... தா ...
இன்னா சோவா காட்றாங்க ... அப்படியே
முழ்சிநிக்குற? "
"இருங்க ஒரே ஒரு நிமிஷம் ... ப்ளீஸ்"
"சர்தான் ... பர்ஸ்ட் டைமா? சரி நா
வேணா அவுக்கவா? இன்னாயா உடம்பெல்லாம்
கொதிக்குது? வேக்குது? டாக்டர் ஊடு
பக்கத்துல தான், வரியா??"
"இல்ல மேடம் ... இட்ஸ் ஒகே ...
நான் கெளம்புறேன்"
என்று சொல்லி, பெல்டைச் சரி
செரி செய்து கொள்கிறேன். செல்லைப்
பார்க்கிறேன், என் அமெரிக்க ஆபீசிலிருந்து
ரெண்டு மிஸ்ட் கால், அண்ணனிடமிருந்து
ஒரு கால் ...
" உங்க பீஸ் என்ன?"
"யோவ் ... ஒன்னியும் செய்யல ...
இதுல பீஸாம் ... கண்ணாலம் ஆயிச்சா ?"
"இன்னும் இல்லீங்க"
"என்னைக் கட்டிக்கிறியா?"
"என்ன? !!!" வியர்வையைக் கர்சீப்பால் துடிக்கிறேன்.
"சொம்மனாக்க்சும் கேட்டேன் ... உன்னிய
என் பொண்ணு கூட கட்டிக்காது ... பாத்துப்
போயா ... ஊட்டுக்குப் போய் நிராபின்
சாப்பிடு ... நெர்வசாக்குற ... இன்னொரு
தபா வேணும்னா வரியா ... இன்னும் பசங்க
ட்யூஷன் போய் வந்திருக்காது ... வாயா ...
காசெல்லாம் வாணாம்"
"இல்ல ... பரவாயில்ல மேடம் ... நைஸ்
மீட்டிங் யூ ... "
"இன்னா மீட்டிங்கு ... யோவ் ... ஆளு
தான் ஆறடி இருக்குற ... உன்னைய
கண்ணாலம் கட்டிக்க எந்த பொம்பளைக்கு
தகிரியம் வரும் ... உள்ள டோல்
பீசுயா நீயு ... இந்நேரம் பீட்டரா இருந்தான்னு
வைய்யு ... என்னிய பஞ்சர் பார்த்து ...
சரி உடு ... உனுக்கு எதுக்கு அதெல்லாம்,
பாத்துப் போய் சேரு"
என்று சொல்லி சடையைச் சரி செய்து
ஆயாசமாய்க் கிளம்புகிறாள்.
வந்த கோபத்தில் எனக்கு அவளை ராயபுரம்
தமிழில் ஏதாவது திட்டலாம் போல் இருக்கிறது,
வேண்டாம் என்று தோன்றி, அவள் மேல்
மண்ணைத்தூற்றி அடிக்கிறேன் ... அது
அவள் மேல் பட்டு அவள் கீழே விழுந்து
மயக்கமாகி இறப்பது போல நினைத்துக்
கொண்டே வந்த மிஸ்ட் கால்களுக்கு டயல்
செய்ய எத்தனிக்கிறது கை.
************************************************

Labels:
இந்த வருட சிறுகதைகள்
Saturday, January 2, 2010
ஆண்ட்ரியா
எல்லா டைரிகளும் உண்மை பேசுவதில்லை,
கண்ணிருந்தால் அழும்.
நேற்று பெய்த மழை, இன்னமும் கலிபோர்னியாவின்
கருஞ்சாம்பல் தெருவை கொஞ்சமாக சுத்தப்படுத்திக்
கொண்டிருந்தது. எனக்கு இதை ரசிப்பதற்கெல்லாம்
ரசிப்புத்தன்மையும் பொறுமையும் இல்லை. அரைநாள்
மிச்சத் தூக்கமும் இதோ இந்த கடைசி சிகரட்டும் தான்
இப்போதைய தேவை. மணி அதிகாலை இரண்டு.
என் எல்லை இந்த சுவருடன் முடிகிறது. எனக்கென்று
கொடுக்கப்பட்டுள்ள இந்த 14x16 அறை. ஒரு டிவி ,
கவுச் என்று செல்ல ஆங்கிலத்தில் சொல்லப்படும்
மஞ்சள் சோபா, இன்டர்நெட் வசதியுடன் ஆபிஸ்
லாப் டாப். இவைகள் தான் நான், V.நந்தகுமாரன்.
இது ஒரு பெரிய பங்களா, காண்டோ என்று
சொல்வார்கள். மூன்று அறைகள், இந்த முன்னறையில்
நான், பக்கத்துக்கு அறையில் யாரும் இல்லை என்று
நம்புகிறேன். மற்ற அறையில் ஒரு சப்ப மூக்கு
குள்ள ஜப்பானியன் எப்பொழுதாவது ஜிம்மில் பார்பேன்.
வீட்டின் நடுவில் பொத்தாம் பொதுவாய் டெக்சாஸ்
சோபா மற்றும் இத்தியாதிகள். முக்கால்வாசிப் பொருட்கள்
அதிகம் பயன்படுவது கூட கிடையாது.
சான்டியகோ நகரம், மார்கழிக் குளிர், லேசாய்ச் சில
சமயங்களில் கதை கூட எழுத வைக்கும். நான்
இருப்பது ஒரு மலைப் பிரதேசம், வெளிச்சம் குறைவு,
தயிர் வாங்க கூட ஒன்றரை மயில் தாண்டத்
தான் போக வேண்டும், எதிரே ஒரு மலிவான மெக்சிகன்
கடை உண்டு, ஆனால் என் தேவைகள் அதையெல்லாம்
எதிர்பார்ப்பதில்லை. இன்றுடன் இரண்டு வருடமாகிறது
இங்கு வந்து.
இதோ, வீட்டின் பொது சமயலறையில் பால் பற்ற
வைக்கிறேன் ... ஏதோ பாடல் கேட்கிறது. கண்டிப்பாக
உருது பாடல் தான், ஆவரணங்கள் சொல்கிறது.
எங்கிருந்து வருது இந்த பாடல்?
குரல் லேசாக வலுக்கிறது. பக்கத்துக்கு அறையில்
யாருமில்லை என்று தான் நினைத்திருந்தேன்.
பாடலில் ஒரு லேசான சோகம் இழையோடுகிறது.
கஜலின் ஒன்று விட்ட தங்கை போல சுருதி சேராமல்
ஏறி இறங்கும் வினோதம். யாராக இருக்கும்?
"வேண்டாம் நமக்கெதுக்கு வம்பு. இல்லை ... யார்
என்று தான் பார்ப்போமே". சிகரட் கையை சுட்டது,
கவனிக்கவில்லை.
பாடல் இப்பொழுது கேட்கவில்லை. நான் அந்த
அறையின் வாசலில் இருப்பதை யாராவது பார்த்தால்
'ந்யூசன்ஸ்' என்பார்கள் இங்கே. ஆனால் ஹவுஸ் ஓனர்
தவிர இங்கு வேறு யாரும் இல்லை, அவரும்
அவள் மகளைப் பார்க்க சென்ற வாரம் ... இப்பொழுது
பாடல் மீண்டும் தொடர்கிறது.
"ஓ ஷிட் " ... பால் பொங்கிவிட்டது ... புகை ...
அறை முழுதும் ... ஹாலின் மேல் சுவரில் பொருத்திய
புகை சென்சார் சத்தம் போட வாய்ப்பு என்று மனதிற்குள்
சொல்லி முடிக்குமுன் சத்தம் ஆரம்பிக்கிறது ... ஊரே அதிரும் சென்ஸாரின் பலாத்காரச் சத்தம்.
அதன் மூக்கிலுள்ள புகையை அணைக்கும் முயற்சியில் நான்
அங்கும் இங்கும் டவல் தேடி ஓட அவள் 'மடார்' என்று அவளுடைய
அறைக் கதவைத் திறந்து வெளி வருகிறாள்.
சுமார் நாற்பது இருக்கும் ... வெளிறிய முகம் ... கிழிந்த டீ ஷர்ட் ...
அமெரிக்காக்காரி அல்லது கனடாக்காரி எனலாம். தேவைக்கதிகமான
உடம்பு, சாம்பல் முடி ... ஒரு வழியாக துண்டு கிடைத்து சென்சார்
சமாதானமானது.
துண்டைக் கீழே போட்டு, 'ஐ யாம் சாரி ... " என்றேன்.
அவள் பதில் எதுவும் சொல்ல வில்லை. ஹாலிலுள்ள ஏசியை
ஒரு பாய்ண்ட் கூட்டிவிட்டு அரை இன்ச் புன்னகையுடன் 'மடார்'
என்று கதவைச் சாத்தி உள்ளே சென்று விட்டாள்.
சாப்டர் - 2
இதுவரை இவளைப் பார்த்ததில்லை, ஆனால் எங்கேயோ பார்த்தது
போன்ற முகம். இரண்டாம் முடக்கு குடிக்கும் பொழுது ஒரு லேசான
அழுகை. அடுத்த சுவரில் தான், அவள் அறை, கண்டிப்பாக எல்லா சத்தமும்
கேட்கும் போலிருக்கிறது, ஆனால் இன்று தான் முதல் முதலாக சத்தம்
கேட்கிறேன். இன்று தான் வந்தாளோ? ஆனால் எப்படி வந்திருக்க முடியும்?
இந்த பங்களாவின் வீட்டுக்காரர் கிறிஸ்தமஸ் லீவுக்கு ந்யூயார்க் போய் ஒரு வாரம்
ஆச்சே ... என்னமோ ... அழுகை நின்ற பாடில்லை.
"என்னன்னு கேட்கலாமா ? அடப்போடா ... உனக்கெதுக்கு வம்பு.
இல்ல ... கேப்போம், பொழுதாவது போகும் ... அவ அழறது உன்
பொழுதுக்கு ஊறுகாயா? இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால்
தூக்கம் பணால் தான் ... சரி ஒகே"
என்று எனக்குள் சொல்லிக் கொண்டே தூக்கம் ஆரம்பித்து டைரியை மூடுகிறேன்.
புதன்கிழமை. இன்னும் ஒரு வாரத்தில் ந்யூ இயர். எனக்கு இதிலெல்லாம்
நம்பிக்கை இல்லை. கால விரயம்.
காலையில் லானில் சிகரட் பிடிக்கையில் அவள்.
"ஹாய்"
"ஹாய்"
"ஆர் யூ ஒகே"
"ஐ யாம் ஆண்ட்ரியா"
"நோ ... ஐ மீன் ... இட்ஸ் ஒகே ... ஐ ஆம் நந்தகுமாரன்"
"நேத்திக்கு ஏன் அழுதீங்க?" வேண்டாம் வேற ஏதாவது பேசுவோம் ...
அப்புறமா கேப்போம் என்று சொல்ல வந்ததை முழுங்கினேன்.
"இந்தியா ரைட்?" என்று அவளே சிநேகமாய் ஆரம்பித்தாள்.
"எஸ், ஹவ் அபௌட் யூ?" (how about you?)
"யூ கான் டாக் வித் மீ இன் ஹிந்தி இப் யூ நோ (You can talk with me in hindi, if you know)"
"வாவ் ... நைஸ் டு ஹியர்" (wow ... nice to hear)
நான் அவளிடம் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் பேசுகிறேன். இங்கே எழுதும் போது தமிழ்.
"உங்களுக்கு எப்படி ஹிந்தி தெரியும்?"
"நான் ஆக்சுவலா பாகிஸ்தான்ல பதினாறு வருஷம் இருந்தேன்.
பஞ்சாப் ... உங்க ஊருல கூட பஞ்சாப்னு ஒரு ஸ்டேட் இருக்கில்ல?"
நம்மூர் சேட்டுப் பையன் தமிழ் பேசுவது போல, அவள் ஹிந்தி பேசினாள்.
வேறொரு மொழி பேசுபவள் உச்சரிக்கும் வார்த்தை அவசியமில்லாத
அப்பாவித்தனத்தை அவளுக்குத் தருகிறது. "துமக்கோ... ஹமக்கோ"
சில நேரங்களில் நாம் சிலரை ஏன் சந்திக்கிறோம், எப்படிச் சந்திக்கிறோம்
என்று புரியும் முன்பு அது முடிந்து விடுகிறது.
பேசும் பொழுது, தன் கழுத்தில் உள்ள சிலுவையை இரண்டு
நிமிடத்திற்கு ஒரு முறை தலை கீழாக மாற்றிப் போடுகிறாள்,
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மறுபடியும் நேர் ... நான் அதை
கவனிப்பதை அவள் கவனிக்கவில்லை என்பதை அவள் கண் எங்கோ
தென் மேற்கு திசை நோக்கிப் பேசிக் கொண்டிருப்பதிலிருந்து
தெரிந்தது சவுகரியம். அவ்வளவு வயதாகவில்லை, ஆண்டாள்
கொண்டை போல வித்தியாசமான் முடி அமைப்பு, கண்களில் அடர்த்தியான
சோகம், கழுத்தெலும்பு தெரிகிறது, நல்ல பெருத்த உடம்பு. ஆச்சரியம்,
கம்மல் போட்டிருக்கிறாள், ஆனால் எளிதாக தெரியவில்லை.
மற்றபடி இந்த முறை கிழியாத அல்லது கிழிக்கப்படாத கவுண்"
"ஹலோ" கவனத்தைக் கலைக்கிறாள்.
"என்ன கேட்டீங்க?" என்கிறேன்.
"கேட்டேனா? நான் என் ஸ்டோரி சொல்லிகிட்டு இருந்தேன் ..."
"ஐ யாம் சாரி ... நான் "
"சோ நீங்க நான் சொன்னத கவனிக்கல ... இஸ் தட் ரைட்?"
"இல்ல ... ஐ மீன் ... ஒகே ... நான் ஒத்துக்கிறேன். நீங்க தப்பா
நெனசுக்காட்டி நான் பொய் சொல்லல"
"ம்ம் "
"நான் உங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன் ... பஞ்சாப்,
இஸ்லாமாபாத் இதெல்லாம் கவனிக்கல ... உங்க கிட்ட ஒரு
ஆச்சரியம் இருக்கு. ஆனா கேக்க விரும்பல. ஐ வில் லீவ் இட் டு யூ
(I will leave it to you)"
"டீ சாப்படறீங்களா?"
சம்பிரதாயமாக சொல்லி, பதில் எதிர்பார்க்காமல் தாங்கித் தாங்கி நடந்து
அவள் அறைக்கு ஓடுகிறாள். அப்பொழுது தான் கவனிக்கிறேன்,
அவள் வலது பின் பாதத்தில் ரத்தம் உறைந்த சுவடுகள்.
சாப்டர் - 3
நான் இங்கு பெரிதாக சம்பாதிக்கவெல்லாம் வரவில்லை என்று
தான் சொல்லிக்கொள்ள வேண்டும். காதலித்த பெண்ணின்
பிரிவைத் தாங்கிக் கொள்ள, தப்பிக்க, ஓடி ஒழிவதை விட சிறந்த
வழி உண்டா என்று தெரியவில்லை.
அவள் (ருக்மணி) கோபம், என் அலட்சியம் கலந்து செய்த கலவை
இந்த காதல் தோல்வி.
இதோ இந்த டைரி தான் என் இரண்டாவது காதலி. முக்கால்வாசி
ஆங்கிலம், சிலது தமிழ். இதை யாராவது படித்தால் என் மொத்த
வரலாறும் தெரியும்.சொல்லப் போனால் வரலாறு ஒன்றும் இல்லை,
எல்லாம் வேதியியல் தான். வாழ்க்கையே வேதியியல் கோட்பாடு தானே.
இரண்டு வருடங்களாக நான் நினைத்த எல்லாம் இந்த டைரிக்கு அத்துப்படி.
தமிழிலில் எழுத ஆரம்பிக்கிறேன்.
"சொல்லாத உண்மையும் நன்மையே
கேட்காத கேள்விகளும் உண்மையே
பதில் சொல்லாத கேள்விகளும் உண்மையே
என் கேள்விக்கு பதில் - உண்மை வராது, இருந்தும் நன்மையே"
சில நேரங்களில் சில மனிதர்கள்; ருக்மணி, இதோ இந்த ஆண்ட்ரியா ...
ஞாபகம் வருகிறது, "ஒ ... அவ கிட்ட சாரி கேட்க வேண்டும்"
டக் டக். அவள் கதவைத் தட்டுகிறேன்.
"வாட் டூ யூ வான்ட்"
"ஐ யாம் சாரி "
"வாட் டூ யூ வான்ட்"
மன்னிப்பு கேட்பது வேறு எப்படி, ஹிந்தி எல்லாம் இப்போது
தேவையா? என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்
திரும்புகிறேன்.
"சொல்லாததும் உண்மை" என்று கவிதைக்கு ஐந்தாவது
வரியைச் சேர்த்து, பின் அடிக்கிறேன்.
சாப்டர் - 4
இன்றிரவு, முதல் முறையாக நான் பக்கத்திலுள்ள மெக்சிகன்
கடைக்குப் போய் டார்டியா வாங்கும் பொழுது, சில்லறை
சில்லறையாக எண்ணி கவுண்டரில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
இங்கு பொதுவாக யாரும் சில்லறை வைத்துக் கொள்வதில்லை,
எல்லாம் கார்ட் தான். அதுவும் அவளிடம் நோட்டுக்கள்
கூட இல்லை, சில்லரைக் காசுகள். ஏழு சென்ட் குறைக்கிறது
என்று பாவமாய்ச் சொல்ல, கடைக்கார சைனீஸ்
குறைந்த கண்களுடன் 'இஸ் ஸோகே ' என்கிறான்.
நான் வாங்க வந்ததை மறந்து அவளைத் தொடர்கிறேன்.
"ஹாய் ஏதாவது பிரச்சனையா?"
ஒரு காந்த சக்தி மீண்டும் மீண்டும் பேச வைக்கிறது என்னை.
"யா ... நோ நோ ... இன்னைக்கு பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன்.
அதான் ஒரே சில்லறை" சுந்தரத் தெலுங்கு போல் சுந்தர ஹிந்தி
பேசுகிறாள்.
"ஒகே, நான் வேணும்னா டிராப் பண்ணவா?"
"என்ன விளையாடறீங்களா ... வீடு எதிர்ல தான இருக்கு "
வழிகிறேன். இத்தனைக்கும் அவள் அழகு எல்லாம் இல்லை, என்
கடைசிச் சித்தி வயது இருக்கும். இரண்டு பெரும் சேர்ந்தே போகிறோம்.
சிலுவை பதிமூன்று முறை நேர் செய்யப் படுகிறது. வீடு வருகிறது,
ஜோதிகா கமல் போல அவரவர் ரூமுக்குச் செல்கிறோம்.
முற்றும், அதாவது இந்த நாள். டிசம்பர் 24, 2009.
டைரி மூடப்படுகிறது. தூக்கம் ...
அதிகாலை மூன்று மணி இருக்கும் ... என் அறைக்கதவு
'டம டம' வெனத் தட்டப்படிகிறது. எழப்பிடிக்காமல் கதவைத் திறக்கிறேன்.
பார்த்தால் யாருமில்லை. அசந்து கதவை மூடும் பொழுது,
என் கையை இழுத்து அவள் ரூமுக்குக் கொண்டு செல்கிறாள்.
"என் சிலுவை எங்கே ... ?"
சாப்டர் - 5
"வாட் ,,, ஐ ஆம் சாரி ... உங்க சிலுவை தொலைந்து போச்சா? "
"ஸோ உங்க கிட்ட இல்லையா? இருந்தா கொடுங்க ... இல்லாட்டி
கொடுக்க வேண்டாம்"
"நீங்க ரொம்ப குழம்பி இருக்கீங்க ... "
"எஸ் ... ரொம்ப தலை வலிக்குது ... உங்க கிட்ட ஏதாவது மாத்திரை இருக்கா?"
"இல்லை ... ஆனா தேடிப் பாக்குறேன்."
என்னிடம் மாத்திரை இல்லை, ஆனால் அவளை ஒரு நிமிடம்
ஆஸ்வாசப்படுத்த இந்த பொய் தேவைப் பட்டது. என் ரூமுக்கே
வந்து விட்டாள். மறுபடியும் கிழிந்த கவுண். கிளிப் பச்சை நிறம் .
"ஐயாம் சாரி ... சொல்லாம உள்ள வந்துட்டேன்"
"பரவாயில்ல ... அப்படி ஒண்ணும் தப்பா எதுவும் இல்ல இங்க,
என் டைரியைத் திவிர. அது மட்டும் பாக்க வேண்டாம் ப்ளீஸ்"
"ஓகே, டேக் இட் ஈசி"
"என் கிட்ட மாத்திரை இல்லை ... ஆனா, ஜிஞ்சர் டீ குடிச்சா தலை
வலி சரியாயிடும்"
"ஒகே ... நீங்க டீ போட போறீங்களா? "
"கண்டிப்பா"
"ஷுக்ரியா"
இருவரும் கிச்சன் செல்கிறோம். அதே தாங்கி தாங்கி நடை.
டீயை பெரும் அவசரமாய்க் குடிக்க முயல்கிறாள்.
எனக்கு அவசர அவசரமாய் ஒரு கவிதை தோன்ற, உள்ளே
சென்று எழுதி டைரியை மூடுகிறேன்.
"நான் உங்க கிட்ட நிறைய பேசணும்" என்கிறேன்.
டீக்கு பேச்சு லஞ்சம் என்று நினைத்துக் கொண்டாள் போலும்.
"இப்படி ப்ளான் பண்ணி எல்லாம் பேச கூடாது ... வும் முடியாது "
என்று துரிதமாய் உருஞ்சுகிறாள் டீயின் சூட்டைக் கூட கவனிக்காமல்.
"சரி ப்ளான் பண்ணல. ஆனா நாலு கேள்விகள்"
"ம்ம்ம்"
"எப்போ இங்க வந்தீங்க, நான் உங்கள பார்த்ததே இல்லையே ... அப்புறம் ... "
"நானும் தான் உங்கள பார்த்தே இல்லையே ... ஆனால் எனக்கு இந்த கேள்வி
வரலயே ... இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது"
"புரியல"
"நம்ம திங்கிங் வேவ்ஸ் வெவ்வேற பாதையில போகுது. அடுத்து
ஏன் என் காலுல ரத்தக் கறை, ஏன் நான் அப்பப்ப சிலுவையைக் கடிக்கிறேன்,
கடிச்சேன், ஏன் அத தொலைச்சேன், ஏன் நடக்கும் போது நொண்டரேன்னு
கூட கேப்பீங்களா? சாய்ஸ் உண்டா?"
"சொல்லப் போனா இன்னும் நிறைய இருக்கு ... ஆனா இதெல்லாம் உங்களுக்கு
எப்படித் தெரியும். குட் கஸ்"
"ஏன்னா இப்போ நம்ம வேவ்ஸ் ஒருங்கி இணையறதை கவனிக்கிறேன்"
"நீங்க என்ன சொல்ல வரீங்க? "
"நீங்க நீங்களா, தனியா இருக்க வரைக்கும், உங்க சிந்தனை உங்களுடையது,
என் கூட பேசும் போது, ஆவறேஜிங் பண்ண படுத்து ... மீன்
மீடியன் (mean, median) அப்படின்னு ஸ்டாடிஸ்டிகளா (statistical) சொல்லுவோம்
இல்ல ... அது மாதிரி. இப்போ உங்களுக்கு லேசா பயம் வருது.
சொல்லப் போனா உங்களுக்கு உள்ளுக்குள்ள இப்போ பயங்கரமா வேர்க்குது
இல்லையா?"
சொல்லி விட்டு பழக்க தோஷமாய் தன் சிலுவையைத்
தடவப் பார்க்கிறாள் ... அதன் தொலைந்து போன அச்சு மட்டும் தான்
அங்கு இருக்கிறது, பிங்க் அச்சு.
எனக்கு அவள் சொன்னதில் பெரிதாய் அர்த்தம் இருப்பதாய்
தோன்றவில்லை. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து
உளறுகிறாள் என்றே தோன்றியது.
"இல்ல ... நாட் ரியல்லி. சரி, ஏன் கிழிஞ்ச கவுண் போடறீங்க. "
"தலை வலி போன மாதிரி இருக்கு. தாங்க்ஸ்"
"குட், எந்த கேள்விக்கும் நீங்க இன்னும் பதிலே சொல்ல"
"பதில் கூட சாய்ஸ் தான் இல்லையா?. சரி, ஏன் கவிதை
எழுதறீங்க ராத்திரி?"
"சாரி ... என்ன?"
"இல்ல, இப்படி எல்லாம் கவிதை எழுத உங்களுக்கு நேரம்
எப்படி கிடைக்குது?"
"எனக்கு உங்க கூட பேசலாமா வேணாமான்னு குழப்பமா இருக்கு.
ரொம்ப மைண்ட் ரீட் பண்ணறீங்க ... வூ ஆர் யூ?"
நான் கேட்ட அடுத்த நொடி அவள் தன் மேலாடைத் துணியைக்
கிழித்து எறிகிறாள் ...
சாப்டர் - 6
நான் பிரம்மை பிடித்தவன் போல் நிற்கிறேன். இதற்கெல்லாம்
தயார் செய்து கொள்ளப்பட்டவன் இல்லை நான்.
அவள் தலையை மேலே நோக்கிப் பார்க்கிறாள். அவள் உடல் முழுவதும்
காயங்கள். தோள்களில் யாரோ கத்தியால் குத்திய சுவடுகள்.
மற்றபடி என் கண் எங்கும் செல்லவில்லை, நம்பலாம்.
"ப்ளீஸ் ... கொஞ்சம் ட்ரஸ் பண்ணிருங்க ... எனக்கு ரொம்ப
எம்பாரஸின்கா (embarrassing) இருக்கு"
"ஜீசஸ் நேரா வந்து இப்படி செஞ்சா கூட இப்படித் தான் சொல்லுவீங்களா?"
அவள் கண்ணில் லேசான கண்ணீர்.
"நோ ... எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ... ஐ மீன் ... சாரி.
இருந்தாலும் ட்ரஸ் பண்ணிருங்க. நாம கண்டிப்பா பேசுவோம்"
நான் பாத்ரூம் செல்கிறேன். வருகிறேன்.
"டீ குடிச்சிட்டேன்" என்கிறாள் அப்பாவியாக.
"ஒகே ... எப்படி உங்க உடம்புல இவ்வளவு கத்திக் குத்து"
"இந்த கேள்வியை ஏசுநாதர் கிட்ட இது வரைக்கும் யாரும்
கேட்டதில்லையாம் " லேசான ஏளனச் சிரிப்பு.
"மிஸ் ... சாரி ஆண்ட்ரியா. இங்க பாருங்க, உங்களுக்கு இந்த
உரையாடல் பிடிக்கலேன்னா இத்தோட நிறுத்திக்கலாம், இப்படி எந்த
கேள்விக்கும் நேரடியா பதில் சொல்லலேன்னா ... ஐ மீன் ...
எப்படிப் பேசறது???"
"எதுக்கு தெரிஞ்சுக்கணும்?"
"பரவாயில்ல ... அது உங்க இஷ்டம். சொல்லப் போனா, உங்க அந்தரங்கம்
கூட. அது எனக்குத் தேவை இல்லை. ஆனால் 'வூ ஆர் யூ'னு நான் கேட்டதுக்கு
கூட நீங்க பதில் சொல்லல .. மைண்ட் ரீட் பண்ணறீங்க, நான் கவிதை
எழுதறத சொல்லறீங்க ... ஸோ ... எனக்கு கொஞ்சம் பயம் வந்துட்டதுனால
உங்க கிட்ட தெரிஞ்சுக்கணும் ... நாம அடுத்தடுத்த ரூம் ஷார் பண்ணி
இருக்கோம், அதுக்காகவாவது"
நான் சொல்லி முடிக்கும் முன் அவள் அவசரமாய், உள்ளே செல்கிறாள்.
பெட்டி திறக்கும் சத்தம் கேட்கிறது.
நொண்டிக் கொண்டே வருகிறாள். ஏதோ அரதப் பழைய போட்டோ
ஒன்றைக் காட்டுகிறாள்.
"இதோ இது தான் என் ஹஸ்பண்ட்"
"ஒகே ... இது யாரு?"
"நீங்க என்ன பைத்தியமா ... என் ஹஸ்பண்ட் கூட நான் தானே இருப்பேன்"
"இது நீங்களா ... ப்ளீஸ் உண்மைய சொல்லுங்க ... போட்டோவுல இருக்கற
இந்த முகத்துக்கும் உங்க முகத்துக்கும் துளி கூட சம்மதம் இல்ல ... "
சாப்டர் - 7
எகத்தாளமாய் ஒரு சின்ன சிரிப்பு.
"இது நான் தான் ... எனக்கு ஞாபகம் இல்லைன்னா, நான் கூட இது நான்னு
ஒத்துக்க மாட்டேன். ஆனா இது நான் தான் ... நானே தான் ... "
சொல்லிவிட்டு பால்கனியைத் திறக்கிறாள் ... கொண்டையை
அவிழ்க்கிறாள். சாம்பல் முடி மார்கழிக் காற்றில் கலைகிறது.
வெளியே 5 டிகிரி செல்ஷியஸ் மிதமான பனிக்காற்று. தன் கவுனின்
இடுப்பு நாடாவை லேசாய் தளர்க்கிறாள் ... என்னை வா என்பது போல்
சைகிக்கிறாள்.
"இதோ இது தான் நீங்க பாக்குற ஆண்ட்ரியா ... முற்றிலும் விடுபட்டவள் ...
ஆண்ட்ரியா ப்ரெஸ்டன்... ஆண்ட்ரியா கபீர் ... இப்போ ஆண்ட்ரியா ...
ஜஸ்ட் ஆண்ட்ரியா ... வெறும் ஆண்ட்ரியா"
அழகாய் மூன்று காலங்களையும் சொல்கிறாள். பழைய ஆங்கிலப்
படங்களில் ஹீரோ ஹீரோயின் பேசுவது போல பால்கனிக் குளிரில்
நனைந்து பேச்சு தொடர்கிறது.
"மிஸ்டர் நந்தா ... யூ நோ ... லைப் இஸ் எ பாஸ்டர்ட் ... நீங்க
எவ்வளவு கண்ணியமா இருந்தாலும் நீங்க சாகும் போது
அரைக்கிலோ குற்ற உணர்ச்சியோட தான் சாகறீங்க ...
ஏசு மாதிரி ... உங்க கிஸ்னா மாதிரி ... "
"கிருஷ்ணா ... "
"வாட்டெவர் ... கிருஷ்ணா"
பத்து முறை சொல்லிப் பார்த்து சரியாய் சொல்கிறாள்.
"கிருஷ்ணா !!! எனக்கு இந்த பெயர் ரொம்ப புடிச்சிருக்கு ... "
ஒரு பெருமூச்சு விட்டு தொடர்கிறாள்
"முதல் முதலா கபீரை சிகாகோ ஸ்கூல் ஆப் ம்யூசிக்ல தான் பார்த்தேன்.
பாஸ்டர்ட் ... கிடாரிஸ்ட். அவர் தான் என் கிட்ட பேச ட்ரை பண்ணினாரு ...
பை த வே, உங்களுக்கு ஏதாவது லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா? "
"இருக்கு ... இருக்கலாம் ... சொல்லுங்க"
"இருக்கு, தெரியுது ... நந்தா ... கபீர் ஒரு மஜீஷியன் ... அப்படித்தான் சொல்லணும் ...
மெஸ்மயர் பண்ணிடுவாரு பேச்சுல ... அதாவது மயக்கிடுவாரு ...
ஹிப்நோடைசர் ... சார்மிங் முகம். ஸச்சா முசல்மான் அப்படின்னு
அடிக்கடி சொல்லிக்குவார். ரெண்டு வருஷம் லவ் பண்ணினோம் ...
இன்பாக்ட் நான் கூட கவிதை எல்லாம் எழுதுவேன் ... சூபி கவிதைகள் ... கஜல்ஸ் ... "
நடந்து கொண்டே சொல்கிறாள், ஒரு ஆட்டோபயாக்ரபி போல. குடித்து ஆறிப்
போன டீ கால் வாசி இருக்கிறது. பேசும் போது கை நடுங்குகிறது.
அதே தென் நோக்கி விசித்திர பார்வை. விடாது பேச்சு, சமயத்தில்
ஆங்கிலமே தூக்கலாக இருக்கிறது எனக்கு புரிந்து கொள்ள வசதி.
"நீங்க கவனிக்கறீங்கன்னு அஸ்ஸ்யூம் பண்ணலாமா?" கவனித்து விட்டாள்.
"சாரி சொல்லுங்க" ஜென்டிலாய் சிரித்து மழுப்புகிறேன். மணி அதிகாலை மூன்றரை.
"ஒகே ... "
"கோர்ஸ் முடிஞ்சு அவர் பாகிஸ்தான் போயிட்டாரு. அப்போ இங்க ஈராக்
வார் சமயம், அதனால இங்க இருக்க வேண்டாம்னு நினைச்சாரு போல.
1990 அப்படின்னு நினைக்கிறேன். எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல!!! "
கண்ணீரைத் துடைக்கிறாள்.
"அங்க போய் கூப்பிடறேன்னு சொன்னாரு. ஆறு மாசம் போச்சு ... எந்த ந்யூசும்
வரல ... ஆமா உங்க லவ் எப்படிப் பட்டது?"
"ஆண்ட்ரியா ... கண்டிப்பா நீங்க பேசினதுக்கப்புறம் நான் என் ஸ்டோரி
சொல்லறேன் ... ஏன் இப்படி அப்பப்போ ஸ்டாப் பண்ணறீங்க."
"ஏன்னா என் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தமானது இல்லையா.
அட்லீஸ்ட் கண்ணீராவது? எக்ஸ்யூஸ் மீ"
என்று சொல்லி விட்டு பாத்ரூம் அறைக்குச் செல்கிறாள்.
எனக்கு லேசாக தூக்கம் வருவது போல் இருக்கிறது. உள்ளே சென்று
மெரோனா ஸ்வெட்டர் மாட்டிக் கொள்கிறேன். அந்த ஸ்வட்டரில்
ருக்மணியின் ராயல் சீக்ரட் பெர்ப்யூம் வாசனையும், அவள் கைவண்ணம்
சொன்ன எம்ப்ராய்டறியும் தெரிகிறது நூல் நூலாக ... 'ருக்மணி நந்தகுமார்'
சாப்டர் - 8
"கண்ணீரும் சுகம் தானே ...
அதுவும் உன் முகம் தானே"
அடுத்த வரி எழுத எத்தனிக்கும் முன்
"உங்களுக்குத் தூக்கம் வருதா?" என்கிறாள் ... எல்லாவற்றையும்
கண்டு பிடித்து விடுவாள் போலிருக்கிறது.
"நோ ... பேசலாம், உங்களுக்கு?"
"எனக்கு யார் கூடவாவது பேசணும்னு தோணுது ... பேசலாம் ... இங்கயே,
உங்க ரூம்லயே கூட ... உங்களுக்கு விகல்பம் இல்லைன்னா"
"கண்டிப்பா இல்லை ... பேசலாம்"
என்று சொல்லி அவளக்கு அந்த சின்னத் தலைகாணியை எடுத்துக்
கொடுக்கிறேன்.
"நீங்க நாத்திகர்னு சொன்னீங்க இல்ல?"
"ம்ம்ம்"
"ரொம்ப கஷ்டம் ... நல்ல வேலை எனக்கு அப்படி ஒரு சுதந்திரம்
கிடைக்கல."
"எதுவும் கஷ்டம் இல்ல ... சொல்லப் போனா கடவுள் நம்பிக்கை தான்
கஷ்டம்னு நினைக்கிறேன் ... எல்லாத்துக்கும் ஒரு காரணமும் வேணும்,
கடவுளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. க்ரேசி"
"நல்லா பேசறீங்க, ஸோ உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகல
இல்லையா? உங்க கேர்ள் பிரெண்ட் இந்தியால தான் இருக்காங்களா?"
"எஸ் ... எக்ஸ். ருக்மணி."
"கேள்விப் படாத பெயர். எங்க விட்டோம்?"
"கபீர் பாகிஸ்தானுக்கு போனதா சொன்னீங்க ... 1990"
"குட் மெமரி. எஸ். நான் ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ணிப் பார்த்தேன்.
இப்போ மாதிரி அப்போ இன்டர்னட் ஈமெயில் இதெல்லாம் கிடையாது.
நினைவுகள் மட்டும் தான். அவங்கப்பாவோட பிசினஸ் ப்ராப்ளம், லாண்ட்
ப்ராப்ளம் இதெல்லாம் முடிச்சுட்டு வரதா சொல்லிட்டு போனவர்,
வரவே இல்ல."
சொல்லிவிட்டு என் டைரியைத் திறக்கிறாள்.
"எக்ஸ்யூஸ் மீ ... அது என் பெர்சனல் டைரி"
"ஒ நோ ... ஐ யாம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ... மன்னிக்கணும்"
"இல்ல இல்ல பரவாயில்ல ... கண்டின்யூ பண்ணுங்க, ஐ மீன் உங்க
கதைய"
"இது கதை இல்ல, என் லைப்"
"சரி சொல்லுங்க"
"எனக்கு வேற வழி தெரியல ... நானே வீசா எடுக்க ட்ரை பண்ணினேன்.
முதல் வாட்டி கிடைக்கல, சரியான காரணம் சொல்ல முடியல, செகண்ட் டைம்
தான் கெடச்சுது"
தொடர்கிறாள் ...
"ஆனா அங்க, பஞ்சாப் போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவர் ஒரு பெரிய
சிக்கல்ல மாட்டிக்கிட்டு இருந்தார்னு, அவங்கப்பாவோட பிசினஸ் புல்லா நஷ்டம்
ஆயிடுச்சு. அந்த காலத்துக்கு என்பது லட்சம் கொஞ்சம் ஜாஸ்தி தான்.
என் பணம் ... மொத்தமும் என் பணம் கொடுத்து ... எல்லாம் டாலர்ஸ் ... பாஸ்டர்ட்"
சொல்லும் முன் கண்ணீரைத் துடிக்கிறாள்.
"ஒரு நிமிஷம், எனக்கு பைபிள் வேணும்னு தோணுது. கொண்டு வரவா ... "
கொண்டு வருகிறாள். எனக்கு இந்த இடைவெளி சிகரட்டுக்குத் தேவைப்பட்டது.
"உங்களுக்கு பைபிள் தெரியுமா? "
"நான் நாத்திகன்னு சொன்னேன். இந்தியாவுல தான் நாதிகன்னா ஹிந்துயிசம்க்கு
எதிரா பேசினா போதும், ஆனா, நான் உண்மையான நாத்திகன். எனக்கு
எல்லாக் கடவுளும் ஒண்ணு தான் ... ஒண்ணு இல்ல, ஐ மீன் ஜீரோ ... பைனரிக் (Binary) கணக்கு"
நான் சொல்வதை அவள் ரசிக்கவில்லை.
"எனி வெ ... பைபிளுல ஒரு கோட் வரும்
11:16 A kindhearted woman gains respect, but ruthless men gain only wealth"
கனிவான மனம் படைத்த பெண் மரியாதை பெறுகிறாள், கொடுமைக்காரன்
செல்வந்தன் ஆகிறான் ... இது அப்படியே உண்மையாச்சு ... ஆனா கபீருக்கு மட்டும் தான்.
மறுபடியும் யூ.எஸ் வந்தேன். எங்கப்பாவோட பார்ம் ஹவுஸ் என் பேருல வாங்கினது
ஒண்ணு இருந்துச்சு, சிகாகோவுல. அது எங்கப்பாவோட மொத்தச் சொத்து.
யாரைப் பத்தியும் கவலைப்படாம அதை அவருக்காக வித்தேன். உங்க பணத்துல
சொல்லலும்னா கிட்டத்தட்ட ... ம்ம்ம் ... ம்ம்ம்ம் ... ஒகே ... ரெண்டரைக் கோடி
ரூபாய் அப்படின்னு வெச்சுக்கோங்க"
"எங்க பாரன்ட்சுக்கு இதுல சுத்தமா சம்மதம் இல்ல ... நாங்க அக்சுவலா
பிரெஞ்ச் கனடியன்ஸ். கொஞ்சம் கலாசாரம் உண்டு. பட் லைப் கோஸ் லைக் தட்
(But life goes like that). யாரோட விருப்பம் இல்லாம தான் கல்யாணம் செஞ்சுகிட்டேன் ...
மெஸ்மரிசம் ... பாகிஸ்தான்ல ... என் சைட்ல நான் மட்டும்.
முதல் ஆறு மாசம் தான் லைப் நல்லா போச்சு. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது
உண்மைகள். அவர் ஒரு ஏமாத்துப் பேர்வழி. பிசினஸ் கடன் இதெல்லாம் பொய் ...
என்னை முழுசா ஒரு முஸ்லீம் பெண்ணா மாத்திட்டாரு ... எனக்கு எல்லாமே
மயக்க நிலையில நடந்தா மாதிரி இருக்கு ... நபீசா ... உருது கத்துகிட்டேன் ... ஒரே
பொழுதுபோக்கு இந்த கஜல்ஸ் தான் ... அதை வெச்சு சில புக்ஸ் கூட எழுதினேன் ...
கொஞ்சம் பணம் ... பதினாறு வருஷப் பணம் ... "
மூச்சு விடாமல் பேசி, மினரல் வாட்டர் குடிக்கிறாள் ... லேசாய்
ஒரு கஜல் பாட்டை முணுமுணுக்கிறாள் ...
"இதெல்லாம் நானே எழுதிய பாட்டு ... கேக்கறீங்களா? "
"இதோ இது தான் நான் முதல் முதலா கபீரை வர்ணிச்சு எழுதின பாட்டு ..."
"கரு நீளமான தேகம் உடைய என்னவனே ...
உன் மோகத்தில் நான் உன்னைச் சரணடைகிறேன் ...
உன் சிகப்பான கண்களில் என்னை இழக்கிறேன்
உன் தீர்கமான பளபளப்பான முகம் என்னை கவர்ந்திழுத்து
இரவும் நீயாக பகலும் நீயாக உணர வைத்து மாயவலையில் பிண்ணிப் பிணைய வைக்கிறது ... "
அழகான ஆங்கிலத்திலும் உருதுவிலும் எழுதி இருக்கிறாள் ...
அழகான கற்பனை ... கபீரைப் பற்றி. அவன்(ர்) முகத்தின்
பிரகாசம் சூரியனும் சந்திரனும் சேர்ந்த பளிங்கு போல இருக்கிறதாம்.
மொத்தம் எட்டு வரிப் பாடல்.
எனக்கு அவள் பேசுவதில் மொத்தமும் உண்மை என்று தோன்றவில்லை.
என்ன காரணம் என்று சரியாய் சொல்ல முடியவில்லை.
"உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு தோணுது இல்லையா? " அதையும்
யூகிக்கிறாள்.
"கண்டிப்பா இல்ல ... ஐ மீன் ... விருப்பம் ... சொல்லுங்க"
"ம்ம்ம் ... பதினாறு வருஷம் ... பாகிஸ்தான்ல ... ஒரே ஒரு குழந்தை
பொறந்துச்சு ... செத்து போச்சு ... டைப் பீ ஹெபாடிடிஸ் (Hepatitis). பாகிஸ்தான் ...
நிறைய கொடுமைகள் ... ரத்த காயங்கள் ... எல்லாம் எதுக்கு?
லவ் ... என்ன செய்ய. நான் நாலு வருஷம் போராடி டைவர்ஸ் வாங்கி
வந்துட்டேன் ... வரும் போது என் கிட்ட இருந்த பணம் ஜஸ்ட்
1380 டாலர்ஸ் அப்புறம் ஒரு சொத்து ... கேக்கவே சிரிப்பா இல்ல ... "
நான் கொடுத்த தலைகாணியில் சாய்ந்து கொள்கிறாள்.
சிரிக்கிறாள். அழுகிறாள். பாடுகிறாள். பைபிளைத் திறக்கிறாள்.
மணி 4:45 அதிகாலை.
"என்னுடைய குடும்பத்தைத் தேடினேன் ... சிக்காகோ ... யாருமில்ல அங்க.
நாலு மாசம் கழிச்சு தேடிக் கண்டு புடிச்சேன். எங்க அப்பாவோட
ஸ்டூடன்ட் ஒருத்தன் வழியா அவங்க அட்ரஸ் கெடச்சுது. இங்க தான் இருந்தாங்க ...
லாஸ் ஏஞ்சலஸ்ல. நான் மன்னிப்பு எல்லாம் கேக்க போகல ...
எங்கப்பாவுக்கு நான் அடைக்க வேண்டிய கடன் ஒண்ணு இருந்தது.
இதே மாதிரி ஒரு டிசம்பர் 25 தான் எங்க குடும்பத்தைப் பார்க்க போனேன்.
ரெண்டு வருஷம் முன்னாடி"
அவள் பேசப் பேச எனக்கு கொட்டாவி வருகிறது ... நான் டைரியைப் பார்க்கிறேன்.
ஏதாவது கிறுக்க வேண்டும் போலிருந்தது.
"மிஸ்டர் கிருஷ்ணா ... "
"என் பெரு நந்தா"
"சாரி ... மிஸ்டர் நந்தா, என் லைப் இப்படி போனதுக்கு என்ன
காரணம்னு நினைக்கறீங்க? "
"எனக்குத் தெரியல" ஒரு விதமான அலட்சியமாக சொல்கிறேன் ...
அலட்சியம், என் பிறவிக் குணம்.
"கிருஷ்ணா ... சாரி ... நந்தா, நானே சொல்லறேன் ...
லைப்ல எல்லாமே ஒரு சான்ஸ் தான் ... இப்பவும் நான் என் கபீரை
லவ் பண்ணறேன். ஆனால் அதற்கு என்ன அர்த்தம்னு தெரியல.
நான் இன்னும் எதுக்கு வாழ்ந்துகிட்டு இருக்கேன்னும் தெரியல ...
ஏதாவது காரணம் இருக்கும் ... இருக்கணும். எங்கப்பாவ
பார்க்க போனேன்னு சொன்னேன் இல்லையா ... ரொம்ப பாவமா,
இருந்தாங்க ... யூ எஸ்ல ஏழை ... அந்த காலத்து
பிசிக்ஸ் ப்ரோபாசர். எப்படியாவது கடனை அடிக்கனும்னு
ஆசைப் பட்டேன் ... அவர் என்னைப் பார்க்க கூட விரும்பல, நீயே
தேவை இல்ல, செத்தாச்சு, இதுல மத்தத்தெல்லாம் எதுக்குன்னு
இன்சல்ட் பண்ணிட்டாங்க ... எல்லாம் கனவு மாதிரி இருக்கு.
எவ்வளவு லெட்டர் போட்டும் பதிலில்லை ... நான் கிறிஸ்டியன்
இல்லையாம் ... முஸ்லிமாம் ... எல்லாம் கிராப் (crap)"
நாப்கீனால் தன் கண்ணீரைத் துடைத்து தொடர்கிறாள் ...
"துரத்தி விட்டுட்டாங்க ...என்னைச் சர்ச்சுல கூட சேர்க்கறதில்லை.
சுருக்கமா சொல்லப் போனா நான் ஒரு அநாதை .
மதம் என்னைப் பொருத்தவரைக்கும் எல்லாமே ஒண்ணு தான் ...
கபீர் ... நந்தா ... ப்ரெஸ்டன்" எல்லாம் ஒண்ணு தான். இல்லையா? "
என்னைத் தான் கேட்கிறாள் என்பதை நான் உணர வில்லை ...
"நந்தா ... "
"யூ வில் நெவர் சேஞ் ... உன் கிட்ட போய் என்னைப் பத்தி சொன்னேன் பாரு ... "
என்று கூச்சலிட்டு, தலைகாணியை விசிறி அடித்து சட்டென்று
நான் தலை நிமிரும் முன் கோபமாக எழுந்து செல்கிறாள்.
நான் அப்படியே பேதலித்து அரைத் தூக்கத்தில் அவளையே பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.
சாப்டர் - 10
எதையோ சொல்ல வந்திருக்கிறாள். எதையோ பகிர்ந்து கொள்ள
வந்திருக்கிறாள் ... சே ... நான் என்ன பைத்தியமா கொஞ்சம் அவ
சொன்னதைக் கவனிச்சிருக்கலாமோ?
இவ சொல்றது எல்லாம் உண்மையா ... எந்த கேள்விக்கும் இவளா
பதில் சொல்லல, ரத்தக் கறை, காலுல ஏற்பட்ட காயம் ...
எதுக்கும் பதில் சொல்லல ...இவளாவே வந்தா ... இவளா சொன்னா ....
இவளா கோபப்பட்டு போறா ... போ ... "
அலட்சியம் மறுபடியும் அலட்சியம் !!!
ஆனால் ஏதோ தவறு என்று தெரிகிறது ... கண்டிப்பாக உண்மையோ பொய்யோ
என்னை மதிச்சு தன்னுடைய அந்தரங்க வாழ்க்கைய சொல்லி இருக்கா.
இக்னோர் பண்ணதுக்கு ஒரு சாரியாவது கேக்கணும் ...
அவளிடம் ரெண்டாவது சாரி .. தூக்கம் போய் விட்டது ... ஒரு
விதமான உஷ்ணத்துடன் எழுந்து அவள் ரூமைத் தட்ட
முயல்கிறேன். உள்ளிருந்து லேசாக குறட்டைச் சத்தம் கேட்கிறது ...
"இந்த பொம்பளை ரொம்ப விசித்திரம் ... மூணு நிமிஷம்
கூட ஆகல அதுக்குள்ளே தூங்கிட்டாளா?"
ஒரு சிகரட்டைப் பற்ற வைக்கிறேன். வெளியே போகிறேன்.
ரொம்ப நேரமாக ஹீட்டரில் இருந்ததால், வெளியே போகும் பொழுது
இப்போது ஸ்வட்டர் தேவைப்பட்டது. ருக்மணி பரிசளித்த ஸ்வட்டர்.
ஒரு சினிமா டிக்கட்டின் பின்னால் எழுதி விடலாம் என் காதலைப் பற்றி ...
உள்ளே சென்று டைரியைப் பார்க்கிறேன் ... 2007 ஆம் வருட டைரி ...
இன்னமும் இதில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். காலம் ...
ஈகோ என்று சொல்வார்கள் ... அது மட்டுமே என் காதலுக்கு எதிரி ...
நான் எதையும் ஈசியாக எடுத்துக் கொல்லும் சராசரி வகையான்.
என் காதலையும் சேர்த்து ... பெரிதாக ப்ளாஷ் பாக்கெல்லாம் சொல்லி
போரடிக்க விருப்பமில்லை ... இரண்டு பேருக்கும் சரிப்பட்டு
வரவில்லை ... ரெண்டு குடும்பமும் எவ்வளவு முயற்சி செய்தும்,
பட்டம் அறுந்து நான் இங்கே வந்து இரண்டு வருடமாகிறது ...
இந்த யூ.எஸ் ப்ராஜக்டுக்கு நன்றி.
அதற்கப்புறம் ஒரே ஒரு முறை பேச முயற்சி செய்தேன். அதுவும் ஒரு
பேச்சுக்குதான் ... சரிப் பட்டுவரவில்லை. அதே ஈகோ, அதே சண்டை ... அதே அலட்சியம் ...
a + b = c
எழுதுகிறேன் ...
என் வாழ்வில் இன்னொரு
பெண்ணில்லை ... எந்த பெண்ணும் இல்லை ...
சிகரட் முடிகிறது. மணி 5:10. டைரியை மூடுகிறேன்
அசுவாரஸ்யமாய் ... காற்றில் லேசாக ஆடுகிறது டைரியின்
எழுதப்படாத பக்கங்கள் ... இன்னும் நான்கு நொடிகளில் தூங் ....."
சாப்டர் - 11
டிசம்பர் 25. மணி கிட்டத்தட்ட காலை ஒன்பது இருக்கும் ...
மொத்தம் நான்கு மணி நேரத்தூக்கம் கூட இல்லை ...
கொட்டாவியுடன் ஆரம்பிக்கிறேன் ...
வெளியே இன்னமும் விடியவில்லை ... மார்கழிக் காலை
தூக்கத்துடன் சோம்பேறித்தனமும் பங்காளிகள்.
சிகரெட்டைத் தேடுகிறேன் ... அதற்கு முன்னாள் இரவு
நடந்தது நினைவிற்கு வருகிறது. முதலில் அவளிடம் போய்
சாரி கேட்க வேண்டும்.
இதோ அவள் ரூமுக்கு நடந்து கொண்டிருக்கிறேன் ...
ஹலோ ... ஹலோ ... கதவை மிதமாகத் தட்டுகிறேன்.
பதிலில்லை. உள்ளே பூட்டப்படவில்லை என்று
ஊர்ஜிதப்படுத்துகிறேன். நல்ல வேளை!!!
சரி, இவ்வளவு பழகி விட்டோம் ... என்ன பார்மாலிடி (formality) என்று
நினைத்துக் கொண்டே, ஒரே ஒரு முறை சம்பிரதாயமாக
தட்டி விட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் கதவைத் திறக்கிறேன்.
நான் கண்ட காட்சி என்னை ஸ்தம்பிக்க வைக்கிறது ...
தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பாள் என்று யூகித்தால்
தவறு ... அவள் அறை காலியாக இருந்தது. காலி செய்து கொண்டு
சென்று விட்டாள் ...
பெரும் ஏமாற்றம் !!! என்ன செய்வதென்று புரியவில்லை.
சிகரட்டுடன் லானுக்கு வருகிறேன் ... மற்றொரு கையில்
டீ ... ஜிஞ்சர் டீ. அவள் ஞாபகம் வருகிறது ...
கையைக் கிள்ளிக் கொள்கிறேன். நினைவு தான் ...
அதே நினைவு தான் இப்பொழுது குழப்புகிறது. ஒன்றும் புரியாமல்
நின்றேன் என்று சொல்வார்கள் ... அப்படி இருக்கிறது.
ரூமுக்கு வந்து டைரியைத் திறக்கலாம் என்றிருந்தேன் ...
டைரிக்குப் பக்கத்தில் அவள் பைபிள் ...
அடிப்பாவி இத மறந்துட்டாளே ... சரி இதுக்காகவாவது
திரும்ப வந்து தான் ஆகணும் ...
மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ...
எங்க போயிருப்பா?
இவ சொன்னது எல்லாம் உண்மைன்னு ஏன் என்னால நம்ப முடியல?
சரி, பொய்ன்னு எப்படி யூகிக்க முடியும்?
உண்மைன்னு எப்படி, யார் ஊர்ஜிதப் படுத்த முடியும்?
சொல்லப் போனா விகிதாச்சாரம் கூட மாறலாம் இல்லையா?
அப்படி மாற்றிச் சொல்லறதுல என்ன பலன், பயன்?
ஒரு வேளை என் கிட்ட பரிதாபம் சம்பாதிக்கலாமில்லையா?
அத வெச்சிகிட்டு கடைக்கு போய் ஒரு சிப்ஸ் பாக்கட் கூட
வாங்க முடியாது ... பின்ன எதுக்கு?
துணை ... ம்ம்ம் ...துணை ... அவளுக்கு என் துணை தேவைப்பட்டிருக்கு ...
எனக்கு?
சே சே ... கண்டிப்பா இல்லை ... பின்ன எதுக்கு
இன்னமும் அவளை நினைச்சிக்கிட்டு இருக்கேன்?
லவ்வா?
ச்சி ... மை பூட் (my foot)... உலகின் இரண்டாவது முட்டாள் தனம்
காதல் ... அக்கான்னு ஒரு பீலிங்கா?
அந்த மாதிரி நினைச்சா அது நடிப்பு ...
ஒரு வேளை சிநேகிதியா?
அப்படி இருந்தா அவளை நேற்று அலட்சியப்படுத்தி இருக்க மாட்டேன் ...
கண்ணை மூடுகிறேன். பதற்றத்தில் எனக்கே தெரியாமல் குளமாய்
வியர்க்கிறது ... பானைப் (fan) போடுகிறேன் ... கொஞ்சம் பரவாயில்லை ...
பைபிளைப் பார்க்கிறேன் ... ஒரு வெறுமை.
காற்றில் பக்கங்கள் தானாகவே திருப்பப்படுகின்றன ... ஏதோ
தெரிகிறதே ... என்னது அது ? வாட்? (what?)
சாப்டர் - 12
ஒரு அழகான ப்லாட்டினமா (platinum) வைரமா என்று தெரியவில்லை.
வயலட் நிறத்தில் பளபளக்கிறது சின்ன நெக்லஸ், பெண்கள் கழுத்தில்
சூடிக் கொள்வது.
ஒ ... அப்ப சரி, அப்படின்னா அவ கண்டிப்பா வந்து தான் ஆகணும்
என்று சிந்திக்கும் முன்பே ஒரு பேப்பர் தெரிகிறது ... லெட்டர்.
சின்னதான எழுத்துக்கள் ஆங்கிலத்தில் ஒரு நிதானத்தில்
எழுதப் பட்டிருக்கிறது.
"ஹலோ கிருஷ்ணா, சாரி நந்தா ... என்ன காரணம் தெரில,
உங்க பெயர் கிருஷ்ணா அப்படின்னு தான் ரெஜிஸ்டர் ஆயிருக்கு
மனசுல ... சப்கான்ஷியாஸ் மைண்ட் ... ஆழ் நிலை மனதிற்கு நான் அடிமை.
இன்னொரு சாரி ... நான் நேத்திக்கு உங்களுக்குத் தெரியாம
உங்க டைரிய படிச்சிட்டேன் ... உங்க மொத்த காதல்
வாழ்க்கையும் தெரிஞ்சது. அதைத் தவிர்த்துப் பார்த்தால்,
யூ ஆர் எ நைஸ் மான் ... உங்களுடைய அலட்சியத்தைக்
கை விடணும் ... கபீர் மாதிரி ஆளையே நான் இன்னமும்
லவ் பண்ணும் போது, நீங்க கண்டிப்பா ருக்மணியைக் கல்யாணம் செஞ்சுக்கணும்.
இன்னொரு விஷயம் ... நீங்க எனக்குத் தூதுவன் ... இன்னைக்கு
கிறிஸ்தமஸ். ஜீசஸ் பிறந்த நாள் ... சொல்லப் போனா என் பிறந்த
நாள் கூட இன்னைக்குத் தான் ... சர்ப்ரைசிங் ... அதே மாதிரி
எனக்கும் தோளுல (shoulders) காயங்கள் ... கழுவரையில் (crucifixion)
ஏற்றும் நாள் வந்துடிச்சு போல ... எது எப்படியோ ... நீங்க தான்
எனக்குத் தூதுவன்னு சொன்னேன் இல்ல ...
இந்த லெட்டர் கூடவே நான் வெச்சிருக்கற பிளாட்டினம் நெக்லஸ்
நான் பாகிஸ்தான்ல சேர்த்த மொத்த சொத்து. இதை எங்கப்பா கிட்ட
சேர்க்கணும்னு நெனைச்சேன் ... கடைசி வரைக்கும் அவர் ஏத்துக்கல.
ஸோ, நீங்க தான் இதை அவர்கிட்ட சேர்க்கணும், கூடவே நான் அவருக்கு
எழுதின லெட்டர் ஒண்ணும் இருக்கு.
இந்த கடமையா நீங்க முடிக்கணும், முடிப்பீங்க.
உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. எனக்கு உண்டு ...
உங்களை எல்லாக் கடவுளும் வாழ்த்தட்டும் ... என்னைத் தொடர்பு
கொள்ள முயல வேண்டாம் (எப்படி இருந்தாலும் நான் நம்பர் கொடுக்கல,
அதனால எனக்குக் கவலை இல்லை !!!) "
அந்த லெட்டரின் கீழ் அவள் அப்பாவின் லாஸ் ஏஞ்சலஸ் முகவரி
எழுதப் பட்டிருந்தது. அதற்குக் கீழ் மற்றொரு தாளில்
அவள் கபீரின் மேல் எழுதிய காதல் கவிதை கூட இருக்கிறது ...
"கரு நீளமான தேகம் உடைய என்னவனே ...
உன் மோகத்தில் நான் உன்னைச் சரணடைகிறேன் ...
உன் சிகப்பான கண்களில் என்னை இழக்கிறேன்
உன் தீர்கமான பளபளப்பான முகம் என்னை கவர்ந்திழுத்து
இரவும் நீயாக பகலும் நீயாக மாயவலையில் பின்னிப் பிணைய வைக்கிறது ... "
என் டைரி என்னைக் காட்டிக் கொடுத்த வெட்கத்தில் தன்னை
பான் (Fan) காற்றில் மூடிக் கொண்டது ... டைரியும் அந்த பைபிளும் ஒரே நிறம் !!!
ஊரெல்லாம் கொண்டாட்டம் என்று நம்மூர் தீபாவளி போல
வர்ணனை எல்லாம் சொல்ல முடியாது. கார் கிளம்புகிறது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ...
ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக அவள் வீடு,
இல்லை, அவள் அப்பா வீடு வந்தது.
ஏழை வீடு என்று பார்த்தவுடன் தெரிகிறது. அமெரிக்க ஏழை.
கதவுகளில் நிறைய உடைசல்கள். வண்ணாரப் பேட்டை ஓட்டு வீடு
ரீமிக்ஸ் செய்தது போல் தோற்றம்.
"யார் வேணும்?" கனத்த ஆங்கிலத்தில் கவுபாய் போன்று
ஒரு கிழவர் வெளிவந்தார். கனடியன் என்று தெரிகிறது.
"இங்க ஆண்ட்ரியா ... அப்படின்னு ... அதாவது ... "
ஒரு முறை என்னைக் கண்ணோடு கண்ணாக நேராகப் பார்த்து,
கண்களைச் சுருக்கி, "யாருமில்லை" என்று முகத்தில் அடித்தது போல்
கதவை மூடிச் செல்கிறார்.
"ஹலோ ... "
நான்கு முறை கூப்பிட்டும் பதிலில்லை. நான் கொண்டு வந்த நகையைப்
பற்றி கதவு வழியாக சொல்கிறேன். அதற்கும் பதிலில்லை.
பாதரசம் போன ஜன்னல் கண்ணாடி வழியாக உள்ளே எட்டிப் பார்க்கிறேன்.
சாயம் போன மெழுகு வெளிச்சத்தில் நன்றாகவே தெரிகிறது ... கருப்பு வெள்ளையில் ஒரு புகைப்பட ப்ரேம்.
அங்கு நான் கண்டதை சொல்ல நினைத்தால் கூட நடுங்குகிறது ...
ஆண்ட்ரியா ப்ரெஸ்டன்
பிறந்த நாள் : Dec 25 1966
இறந்த நாள் : Dec 25 1991
சாப்டர் - 13
உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ...
ஆம், அவள் இறந்து பதினெட்டு வருடங்கள் ஆகிறது.
அப்படின்னா, ரெண்டு நாளா என் கூட பேசினது ... பழகினது ...
யாரு? நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்குகிறது ...
நாத்திகனுக்குக் கூட பேய் பயம் உண்டா?
இல்லை ... இருக்கு ...
என் கால்கள் தானாக வாசல் நோக்கி நடக்கின்றன. கையில்
என்ன? ஒ ... இதைக் கொடுக்கத்தானே நான் இங்கே வந்தேன்.
பொய்யோ மெய்யோ ...பேயோ பெண்ணோ .. இது என்னுடையது
கிடையாது. அவங்கப்பா கிட்ட நான் இதைச் சேர்க்க கடமைப்பட்டிருக்கேன் ...
வேற வழி இல்ல ... இதைக் கொடுத்து தான் ஆகணும் ... அவங்கப்பாவுக்கு
அவ எழுதின ... இல்ல ... எழுதினதா சொன்ன லெட்டரும் கொடுக்கணும்.
இரண்டையும் கொண்டு வந்த என்வலப் கவரில் வைத்து, கவரை ஒட்டி மூடுகிறேன்.
"மிஸ்டர் ப்ரெஸ்டன் ... உங்க பொண்ணு உங்களுக்குக் கொடுக்கச் சொன்ன
லெட்டரும், ஒரு நகையும் இந்த கவர்ல வெச்சிருக்கேன் ...
இத தயவு செஞ்சு எடுத்துக்கோங்க ... "
"உங்க பொண்ணு" என்று சொன்ன போது என் வாய் தானாய் நடுக்கத்தில் குழறியது.
சொல்லிவிட்டு பதற்றமாய் வெளியே வர, காற்று பலமாக வீசுகிறது,
வானம் மேகமூட்டத்தைக் கூட்டுகிறது. வாசலில் மயான அமைதி
நிலவுகிறது. அவர்கள் வீட்டில் கட்டி வைத்துள்ள அந்த கரு நாய்
ஒரு விதமான இறுகின முகத்துடன் என்னையே முறைத்துப்
பார்த்துக் கொண்டிருக்கிறது.
"நான் நாத்திகன்" என்று சொல்லலாம் போல இருந்தது அந்த நாயிடம்.
இரண்டடி வைப்பதற்குள் நல்ல மழை; காரில் ஏறுகிறேன்.
இஞ்சின் ஸ்டார்ட் ஆகி, ஹெட்லைட்டைப் (head light) போட்டு கிளம்பும் போது
அவள் அப்பா அவசரமாய் வாசல் வந்து நான் கொடுத்த
கவரைப் பிரித்துப் பார்த்ததை நான் கவனிக்கவில்லை !!!
சாப்டர் - 14
கிட்டத்தட்ட கடைசி இரண்டு நாள் ... என்ன நடந்திருக்கிறது என்னைச் சுற்றி?
மறுபடியும் கிள்ளுகிறேன் ... மரத்துப் போய் இருக்கிறது உடம்பு.
அனலாய்க் கொதிக்கிறது. டாஷ் போர்டிலிருந்த முதலுதவிப்
பையிலிருந்து டைலினால் (Tylenol) மாத்திரை போடுகிறேன்.
வரும் வழியில் எல்லாம் அவளாகவே தெரிகிறாள் ... காற்றில் எங்கும் அவள்
குரல், அவள் பேசிய வார்த்தைகள் ...
"ஐ யாம் ஆண்ட்ரியா"
"சோ நீங்க நான் சொன்னத கவனிக்கல ... இஸ் தட் ரைட்?"
"என்ன விளையாடறீங்களா ... வீடு எதிர்ல தான இருக்கு "
"ஸோ சிலுவை உங்க கிட்ட இல்லையா ... இருந்தா கொடுங்க ... இல்லாட்டி வேண்டாம்"
"ஷுக்ரியா"
"ஏன்னா இப்போ நம்ம வேவ்ஸ் ஒருங்கி இணையறதை கவனிக்கிறேன்"
"கடவுள் நேரா வந்து இப்படி செஞ்சா கூட இப்படித் தான் பண்ணுவீங்களா?"
"இது நான் தான் ... எனக்கு ஞாபகம் இல்லைன்னா, நான் கூட இது நான்னு
ஒத்துக்க மாட்டேன். ஆனா இது நான் தான் ... நானே தான் ... "
"ஏன்னா என் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தம் இல்லையா. கண்ணீராவது?
"இது கதை இல்ல, என் லைப்"
"உங்களுக்கு பைபிள் தெரியுமா? "
11:16 A kindhearted woman gains respect, but ruthless men gain only wealth
"கரு நீளமான தேகம் உடைய என்னவனே ...
உன் மோகத்தில் நான் உன்னைச் சரணடைகிறேன் ...
உன் சிகப்பான கண்களில் என்னை இழக்கிறேன்
உன் தீர்கமான பளபளப்பான முகம் என்னை கவர்ந்திழுத்து
இரவும் நீயாக பகலும் நீயாக உணர வைத்து மாயவலையில் பின்னிப் பிணைய வைக்கிறது ... "
"மிஸ்டர் கிருஷ்ணா ... "
"என்னைச் சர்ச்சுல கூட சேர்க்கறதில்லை"
"யூ வில் நெவர் சேஞ் ... உன் கிட்ட போய் என்னைப் பத்தி சொன்னேன் பாரு ... "
"யூ ஆர் எ நைஸ் மான் ... "
"நீங்க கண்டிப்பா ருக்மணிய கல்யாணம் செஞ்சுக்கணும் "
இந்த கடமையா நீங்க முடிக்கணும், முடிப்பீங்க.
"இன்னைக்கு கிறிஸ்தமஸ். ஜீசஸ் பிறந்த நாள் ... சொல்லப் போனா
என் பிறந்த நாள் கூட இன்னைக்குத் தான்"
கழுவரையில் (crucifixion) ஏற்றும் நாள் வந்துடிச்சு போல"
"நீங்க எனக்குத் தூதுவன்"
"நீங்க எனக்குத் தூதுவன்"
"நீங்க எனக்குத் தூதுவன்"
.
.
.
க்ரீச் .... இன்னும் கால் நொடி கொஞ்சம் தடுமாறி இருந்தால் வண்டி
அடுத்த லேணிற்கு(lane) தவறிப் போய் அப்பளமாகி இருக்கும் ... சே ... என்னது இது ...
முதல் முதலாக பயமாக இருக்கிறது ... இல்லை ... பயப்படக் கூடாது ,
நான் நாத்திகன் ... எனக்குக் கடவுளும் இல்லை, பயமும் இல்லை ...
மீண்டும் மீண்டும் ஆழ்மனதில் ரீங்காரமாய் ஒலிக்கிறது ...
"நீங்க எனக்குத் தூதுவன்"
மழை நிற்கிறது. என் வீடு வந்துவிட்டது. மணி பகல் 12:30 .
சாப்டர் - 15
கால் வைக்கும் ஒவ்வொரு தடமும் எகோவைத் (Echo) தருகிறது.
சாப்பிட்டேனா? தேவை இல்லை ...
அறை முழுவதும் அவள் வாசனை ... ஏதோ ஒரு வாசனை ...
அவள் கம்மல் எழுப்பும் சத்தம் எங்கோ கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது ...
பால்கனி இன்னமும் திறந்து தான் இருக்கிறது.
ஹாலிலுள்ள சோபாவில் வந்து உட்காருகிறேன் ...
போன் கால் வருகிறது ... இந்தியா நம்பர் ... அம்மா ...
"அம்மா"
"டேய் ... எழுந்துட்டியாடா?"
"அம்மா ... "
"என்னடா மாத்தி மாத்தி அதையே சொல்லிண்டு ... டேய் நந்தா ... "
"ம்ம் சொல்லும்மா"
"டேய் ... இன்னைக்கு பிம்மால என் கனவுல ஆண்டாள் வந்தாடா ... "
"யாரு ஆண்ட்ரியாவா ... என்னம்மா சொல்லற?"
"யாருடா ஆண்ட்ரியா ... என்னடா ஒளர்ற ... ஆண்டாள் டா"
"யாரது ..."
"ஆழ்வார் டா ... ஆண்டாள் ... திருப்பாவை எழுதின ஆண்டாள்"
"ஒ ... கிராப்"
"அது சரி ... அவ என்ன சொன்னா தெரியுமா ... நந்தகுமாரனுக்கும்
ருக்மணிக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கணுமாம் ... அது அவளோட
ஆசையாம் ... டேய் கேக்கறதா ... ருக்மணி டா நந்தா"
" ..."
"டேய் ... நீ நாத்திகன் தான். இருந்தாலும் எனக்காக இன்னைக்கு ஒரு நாளாவது
'மார்கழித் திங்கள்' படி டா ... எனக்காக வேண்டாம் ... நல்ல தமிழ் இருக்கு அதுல,
அதுக்காகவாவது "
"..."
"சொல்லவா ... கேட்டுக்கோ ... மார்கழித் திங்கள் ... "
என் அம்மா சொன்னது எதுவும் எனக்குக் கேட்கவில்லை ... ஒரே ஒரு வரியைத் தவிர ...
"கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் ... "
"அம்மா ... அந்த ஆறாவது வரியை இன்னொரு வாட்டி பாடு ... "
"இரு கேட்டுக்கோ ... கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்"
"என்னம்மா அர்த்தம் அதுக்கு?"
"உடனே கேட்டாக்கா எப்படி டா சொல்லுவேன் ... இரு ... "
என்று சொல்லிவிட்டு அம்மா அர்த்தம் சொல்லச் சொல்ல எனக்கு ஆண்ட்ரியாவின்
அந்த கஜல் கவிதை நினைவிற்கு வருகிறது.

"ருக்மணிக்குக் கொஞ்சம் பேசுடா கண்ணா ... டேய் நந்தா"
செல்போன் உறைந்ததா நான் உறைந்தேனா ... என்ன நடக்கிறது இங்கே ...
அவள் சொன்ன வார்த்தை மறுபடியும் ...
"ஹலோ கிருஷ்ணா, சாரி நந்தா ... என்ன காரணம் தெரில, உங்க பெயர் கிருஷ்ணா
அப்படின்னு தான் ரெஜிஸ்டர் ஆயிருக்குமனசுல ... சப்கான்ஷியாஸ் மைண்ட் ...
ஆழ் நிலை மனதிற்கு நான் அடிமை"
"நீங்க கண்டிப்பா ருக்மணிய கல்யாணம் செஞ்சுக்கணும் "
இந்த கடமையா நீங்க முடிக்கணும், முடிப்பீங்க."
என் முழி பிதுங்கி வழிந்தது போல் தோன்றுகிறது ...
லாணிற்கு சென்று சிகரட் ஒன்று குடிக்கிறேன் ...
இதோ நந்தன் என்னும் நான், நாத்திகன், குழப்பத்தின் உச்சத்தில்
உறைந்து உட்கார்ந்திருக்கிறேன். என் டைரி பாவமாய் என்னையே
பார்த்துக் கொண்டிருக்கிறது.
அவசர அவசரமாய்த் தமிழில் எழுதுகிறேன் ...
"ஆண்ட்ரியா ... ஆண்டாள் ... நந்தகுமாரன் ... ருக்மணி ..கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்"
எவ்வளவு முறை எழுதிப் பார்த்தேன் என்று தெரியவில்லை ...
எனக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை ...
டீ வீயைப் போடுகிறேன் ... சி.என்.என் (CNN) அலைவரிசை.
மழை ... புயல் ... ஒபாமா ... ஏதோ ஒரு மூலையில் ஒரு செய்தி ...
"அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் இன்று காலை சண்டியாகோ பசிபிக்
பீச்சின் ஓரமாய் ஒதுங்கியுள்ளது ... தற்கொலை என்று போலீசாரால்
சந்தேகிக்கப் படுகிறது. அவர் பர்சிலிருந்த டிரைவிங் லைசன்ஸ் வைத்து,
போலிஸ் அவள் பெயர் 'ஆண்ட்ரியா ப்ரெஸ்டன்' என்று அடையாளம்
காட்டியுள்ளனர் ... அவளைப் பற்றி விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக
பசிபிக் பீச் 92109 sdpdஐத் தொடர்பு கொள்ளவும் ... "
என்று சொல்லி, அவள் முகத்தை போட்டுக் காட்டினர் ... ஆண்ட்ரியா லேசான
சோகச் செருப்புடன் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
இது விஞ்ஞானமா மெய்க்ஞானமா? இதற்குப் பெயர் தான் சைன்ஸ் பிக்ஷனா?
என்று நினைத்துக் கொண்டே வேலவலத்துப் போன அந்த ஷன நொடியில்
நம்பர் எதுவும் தெரியாமல் UNKNOWN என்று பெயரிட்டு ஒரு போன் கால் வருகிறது ...
"ஹலோ ... " ஏதோ ஒரு பெண் குரல்
சப்தநாதமும் அடங்கிப் போகிறது ... வாய் திக்கித் திணறி ... பேயறைந்தவன் போல தடுமாறிச் செயழிழந்து
கலிபோர்னியா மாகாணம் மொத்தமும் கேட்பது போலக் கத்துகிறேன் ...
"ஆ ... ஆ ... ஆண்ட்ரியா?"
"ஆண்ட்ரியாவா ... ஹலோ ... நான் தான் ருக்மணி"
--------------------------------

சிறு நாவல்
Sunday, July 12, 2009
அந்தோணி
எங்கள் தெருவில் ஒரு பைத்தியக்காரன்
இருந்தான். பெயர் அந்தோணி.
எங்கள் வீட்டிலிருந்து நான்காவது ஓட்டு
வீடு அவனுடையது. இந்த கதை
அந்தோணியைப் பற்றி.
அந்தோணிக்கு சுமார் 19 வயதிருக்கும்
நான் முதலில் அவனிடம் பேசிய பொழுது
(அதற்கு முன்னெல்லாம் அவனைப் பார்த்தாலே
எங்கள் எல்லாருக்கும் பயம்).
எனக்கு அப்பொழுது 15 வயது.
"அந்தோணி "
"இன்னா? "
"எங்க வீட்டுல எங்க போயிருக்காங்க? வீடு
பூட்டி இருக்கே"
"த ... போடா "
என்று சொல்லிவிட்டு கையில் கூழாங்கல்
போல எதோ வைத்திருந்தான், அதை
வைத்து அடிக்க வந்தான்.
இந்த இடத்தில் அந்தோணியின் குடும்பத்தைப்
பற்றி சொல்ல வேண்டும். அவனுக்கு அப்பா
கிடையாது. இவன் சின்ன வயதிலேயே அவர்
வீட்டை விட்டு ஓடி விட்டதாக வதந்தியா
உண்மையா என்று தெரியவில்லை, அப்படிப்
பேசிக் கொள்வார்கள். அம்மா இறந்து போய்
இரண்டு வருடங்கள் ஆயிற்று, அப்பொழுது
அவனுக்கு பதினாறு பதினேழு இருக்கும்.
நன்றாக படித்துக் கொண்டிருந்த பையன்
அம்மா இறந்ததற்குப் பிறகு பைத்தியம்
ஆகிவிட்டதாக பேசிக் கொள்வார்கள் .
அவனுக்கு ஒரே ஒரு தங்கை, மேரி.
இவனை விட மூன்று வயது சின்னவள்.
வேறு சொந்த பந்தங்கள் இல்லை.
சிலர் அவன் அம்மா ஒரு ராத்திரி வேறு
யாருடனோ இருந்ததைப் பார்த்து கோபப்பட்டு
கல்லால் அடித்து, தூக்கு மாட்டி விட்டான்
என்றும், சிலர், அவள் தற்கொலை செய்து
கொண்டாள் என்றும் சொல்வர். யாருக்கும்
தெளிவாக உண்மை தெரியாது, அந்தந்த
சமயங்களில் பொழுதைப் போக்கவும்,
வம்புக்காகவும் சொல்லிக்கொள்ளும்
வதந்திகள். அதிலுள்ள உண்மையின்
விகிதாச்சாரம் அவனுக்கும் அவன்
அம்மாவுக்கும் மட்டுமே தெரியும்.
போலீஸ் கேஸ் என்று ஒரு மாதம்
அலைக்கழிக்கப்பட்டு பின் சந்தேகம்
இருந்தாலும் 'பைத்தியம்' என்ற காரணத்தால்
தப்பிக்க முடிந்தது. அவன் தங்கை பக்கத்தில்
உள்ள டெயிலர் கடையில் வேலைக்குச்
சேர்ந்தாள். அவன் ஒரே ஆறுதல் அவளும்
அந்த சொந்த வீடும் தான்.
அந்தோணி 'பைத்தியம்' என்று பல
முறை பலர் சொல்லியும் ஒரு நாள் அவன்
தங்கையின் கழுத்தை நெரிக்க வந்து,
ரோட்டில் அவளைத் தள்ளி விட்டு தலை
முடியைப் பிடித்து இழுத்து, வீட்டிற்கு
உள்ளே தள்ளிவிட்டு 'டொம்' என்று
கதவைச் சாத்தியதைப் பார்த்த பொழுது
தான் ஓரளவிற்கு ஊர்ஜிதமானது.
ராத்திரி முழுக்க அவள் அழுது கொண்டிருக்க,
இவன் வாசலில் 'ஆகாய வெண்ணிலாவே'
பாடிக்கொண்டு சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தது
எனக்கு வியப்பையும் அவன் மேல
கோபத்தையும் தந்தது.
"அந்தோணி ..."
மறுநாள் காலை எங்கள் வீட்டு சுண்ணாம்பை
வாயால் தடவிக்கொண்டிருந்தவனை
தைரியமாகக் கூப்பிட்டேன்.
"டேய் ... இன்னடா, ஐயிரு வீட்டுல இருக்காரா? "
"அந்தோ ... அந்தோணி, நான் ஒன்னு கேக்கட்டுமா?"
"இன்ன?"
"இல்ல திட்டக் கூடாது ... "
"சொல்றா ?"
"இல்ல வந்து ... வந்து ... நேத்திக்கி ராத்திரி
ஏன் மேரிய அப்படிப் போட்டு அடிச்ச?"
அவன் இந்தக் கேள்வியை என்னிடமிருந்து
எதிர்ப்பார்க்கவில்லை ...
சுண்ணாம்பு தடவுவதை நிறுத்தி விட்டு என்
முதுகில் லேசாய்த் தட்டி விட்டு பல்லால்
சிலுவையை கடித்தவாறே எதிரிருள்ள
துவைக்கிற கல்லில் போய் உட்கார்ந்தான்.
ரொம்ப நேரமாக என்னையே முறைத்துப் பார்த்துக்
கொண்டிருந்தவன், கொஞ்ச நேரத்தில் கல்லால்
அடிப்பேன் என்று சைகை காண்பிக்க
நான் வீட்டிற்குள் பயந்து ஓடி ...
அவனுக்கு மேரி என்றால் கொள்ளைப் பிரியம்.
பல முறை எங்கள் வீட்டிலிருந்து கொடுத்து
விட்ட சோற்றை அவன் ஒரு ஒரு பருக்கை கூட
சாப்பிடாமல் அவளுக்கு ஊட்டி விட்டதைப்
பார்த்திருக்கிறேன். இவன் உண்மையிலேயே
பைத்தியம் தானா இல்லை நடிக்கிறானா என்று
யாருக்கும் சந்தேகம் வரவில்லை, என்னைத் தவிர.
தாத்தாவைக் கேட்டதற்கு
"அடப் போடா அவன் பைத்திக்காரப் பய ... அவனப் பத்தி
என்னண்ட பேசிண்டு ... போய்ப் படி"
என்று ஹிந்து படிப்பதை தொடர்ந்தார்.
எது எப்படியோ, அவனுக்கு எங்கள் தெருவிலிருந்து
தினமும் கஞ்சியோ, பழைய அரிசியோ, புளித்த
தோசையோ ஏதாவது போய் விடும். அவள் அம்மா
எல்லார் வீட்டிலும் வேலை செய்த நன்றியா,
இல்லை, "ஐயோ பாவம்" என்ற பச்சாதாபமா
தெரியவில்லை, எல்லோரும் "கிறுக்குப் பயலே"
என்று வாய் வலிக்க திட்டிக் கொண்டே அவனுக்குப்
படி அளப்பர்.
வேலை எதுவும் செய்வதில்லை. காலை எழுந்து
மேரியை டெயிலர் கடையில் விட்டு விட்டு,
டீக்கடையில் ஒரு ஓசி டீயைக் குடித்து, பக்கத்து
வீட்டு நாயர் அம்மாவின் நாயைக் குளிப்பாட்டி,
"பிராந்தன் " என்ற வார்த்தையுடன் புட்டு சாப்பிட்டு,
மதியத்திற்கு அம்மா வைக்கும் தயிர் சாதம்
மாவடுவைக் கொஞ்சமாய்ச் சாப்பிட்டு, கடைக்கு
திரும்பவும் போய் மேரிக்கு மீதி சாதத்தைக்
கொடுத்து விட்டு , சாயங்காலம் அவன் ஒரு காலத்தில்
படித்த ஸ்கூலுக்கு வெளியே நின்று வேடிக்கை
பார்த்து விட்டு, ராத்திரி பாடிக்கொண்டே தூங்குவான்.
இவ்வளவு தான் அவனின் ஒரு நாள்.
மேரி, கொஞ்சம் கருப்பு என்றாலும் அவள் அம்மாவைப் போல
கலையாக இருப்பாள். அவளைச் சைட் அடிக்காத
இளவட்டங்களே கிடையாது. ஒரு முறை அவள்
வீட்டில் தனியாக இருக்கும் பொது உள்ளே நுழைய
முயன்ற ரேஷன் கடை சந்துருவை பின்னாலிருந்து
அந்தோணி கட்டையால் அடிக்க, நான்கு நாள் சந்துரு
படுத்த படுக்கை.
அன்றிலிருந்து எப்பொழுதும் அவன் அந்த
மரக்கட்டையும், கால்வாயை ஒட்டிய லெதர்
கம்பனியில் யாருக்கும் தெரியாமல் திருடிய
'ஆக்ஸா பிளேடும்' கையுமாகத் தான் திரிவான்.
நான் பார்த்தவரை மேரி யாரிடமும் வீணாகப்
பேசமாட்டாள். நெருப்பு. தப்பான எண்ணம்
உள்ள ஆள் பக்கத்துக்கு தெருவில் வந்தால்
கூட கண்டுபிடித்து விடுவாள். அப்படிப்பட்டவள்
டெயிலர் ரஹீமிடம் தன்னைக் கொடுக்கத்
துணிந்தது ஆச்சரியம் தான்.
எனக்கு நாய் பயம் கொஞ்சம் அதிகம் என்பதால்
ஸ்கூலை விட்டு தார் ரோடு வழியாக வராமல்,
பழைய விறகுக்கடை வழியாக முள்காட்டில்
நடந்து வருவேன். பொதுவாக அந்த வழியை
யாரும் உபயோகிப்பதில்லை. பக்கத்து
வீட்டு நாயர் எப்பொழுதாவது ராத்திரி ஷிப்ட்
முடிந்து வரும்பொழுது ஏதோ வெள்ளை உருவம்
தெரிவதாக மூன்று நாட்களுக்கு பீதியைக்
கிளப்புவார், அதனால் எல்லோருக்கும் அந்த வழி
என்றால் கொஞ்சம் திகில் தான். எனக்கு பேய்
பயத்தை விட நாய் பயம் அதிகம் என்பதால்
தாத்தாவிற்கு தெரியாமல் அதனையே
பயன்படுத்துவேன்.
அப்படி ஒரு நாள் வரும் பொழுது தான் ஒரு
சிரிப்புச் சத்தம். பெரிய முள்காடு என்பதால்
அவ்வளவு லேசாக வெளியே தெரியாது. இரண்டு
பேர் 'உம்மாச்சி குத்தம்' பண்ணிக் கொண்டிருப்பது
மட்டும் கேட்டது. அறியாத வயது என்பதால்
ரெண்டு கருங்கலை அண்டக் கொடுத்து
எட்டிப்பார்த்ததில் பெரிய அதிர்ச்சி ...
மேரியும் ரஹீமும் ... ரொம்ப பெரிதாய் இல்லை,
கொஞ்சம் நெருக்கமாய் இருந்தார்கள்.
எனக்கு முதலில் கிளுகிளுப்பாக இருந்தாலும்
எதோ ஒரு எச்சரிக்கை உணர்வு காரணமாய்
வெளியேறினேன்.
"டேய் ... ஐயிரு பையா"
"இங்க பாரு அந்தோணி, மூர்த்தினு பேர் சொல்லிக்
கூப்பிடு ... "
"சர்தான் ... அம்மா கிட்ட காசு எடுத்து வைக்கச்
சொல்லு, நான் கடைக்குப் போய் மேரிக்கு டீ
வாங்கி கொடுத்துட்டு வரேன் ... "
"சரி ... இரு இரு ... "
எனக்கு என்ன சொல்லி அவனைத் தடுப்பதென்று
தெரியவில்லை. அவனிடம் கடைக்குப் போக
வேண்டாம் என்று சொல்லாமல் அப்படியே விட்டு
விட்டு, கிரிக்கட் பார்க்க உட்கார்ந்தேன்.ஆனால்
மனசு டென்டுல்கரின் செஞ்சுரியை ரசிக்க
விடவில்லை. நானும் டெயிலர் கடைக்குக்
கிளம்பினேன்.
இருபது நிமிடங்களாகும் கடைக்குப் போய்ச் சேர.
அங்கே நான் கண்ட காட்சி வியப்பையும் அவன் மேல்
பரிதாபத்தையும் பத்து மடங்கு கூட்டியது.
ரஹீம் பழைய நைலக்ஸ் புடவையை அசதியாக
தைத்துக் கொண்டிருக்க, அந்தோணி அவள் குடிக்க
குடிக்க டபராவிலிருந்து கிளாசில் டீ ஊற்றிக்
கொண்டிருந்தான்.
அன்றிரவு, நாய் ஒன்றுடன் மல்லுக் கட்டிவிட்டு
அவன் வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டு
வழக்கம் போல "ஆகாய வெண்ணிலாவே ... "
பாடிக் கொண்டிருந்தான்.
தாத்தா ஊரில் இல்லாத தைரியத்தில் அவனைப்
பார்க்க அவன் வீட்டிற்கு போனேன்.
"வாடா .. ஐயிரு ... மன்ச்சிக்க ... வாடா மூர்த்தி"
"அந்தோனி ... மேரி இருக்காளா ஆத்துல ... சாரி வீட்டுல?"
"இருக்கு ... இன்ன வேணும், அதாண்ட என்ன உனுக்கு?"
"இல்ல இல்ல ... நீ இப்போ ப்ரீயா?"
"இன்னது ... டேய், இன்ன நக்கலா ?"
"சரி, நான் உனக்கு ஒண்ணு சொல்லணும் ... "
"இன்னா வேணும் உனுக்கு ... ரெம்ப யோசிக்கிற?"
"அந்தோனி ... அந்த ரஹீம் எப்படிப்பட்டவன்?"
"யாரு ரஹீம் ... ஒ ... டைலர் சாரா?"
'ரஹீம்' என்ற பெயர் அடிபட்டவுடன் மேரி
ஜன்னலை லேசாகத் திறந்து
"அய்யே ... உள்ள வா ... சொம்மா பேசிக்கினு ...
டைம் ஆவுது இல்ல ... பசிக்குது, நாயரம்மா
வீட்டுல வாங்கியாந்த மீன் இருக்கு வா"
என்று பேச்சை மாற்றி அவனைக் கூப்பிட்டாள்.
அவன் என்னைக் கொஞ்சமும் மதிக்காமல்
உள்ளே செல்ல, அவள் கதவை மூடும் பொழுது
என்னைப் பார்த்த பார்வை இன்னமும்
கண்ணில் நிற்கிறது.
மூன்றாவது நாள் நான் கண்ட காட்சி தான்
எங்கள் தெருவை நிலை குலைய வைத்தது,
எப்படியோ ரஹீமின் விஷயம் தெரிந்து அன்று
ரணகளம் தான்.
அவன் சிலுவையைக் கடித்தவாறே. உடம்பில்
துணி எதுவும் இல்லாமல் ஒரு நாயைக் கல்லால்
அடித்துக் கொன்று, துவைக்கிற கல் மேல
உட்கார்ந்து கொண்டு பாடிக் கொண்டிருக்க,
மேரி உள்ளே மயக்கம் போட்டு விழுந்திருந்தாள்.
யாரும் அவர்களைக் கண்டு கொண்டதாய்த்
தெரியவில்லை. மறு நாள் காலை மேரியைக்
காணவில்லை. அவன் வீடு தோறும், தெரு தோறும்
தேடு தேடு என்று தேடிக் கொண்டிருந்தான்.
கிடைக்கவில்லை. ரகீமைச் சட்டையைப் பிடித்து
கேட்டதற்கு 'ஒன்றும் தெரியாது' என்று சொல்லிவிட்டு
அன்றிரவே ஊரைக் காலி செய்தான்.
அந்தோணி அன்று முழுக்க சாப்பிடவில்லை.
அந்த துவைக்கிற கல்லில் உட்கார்ந்து கொண்டு,
மண்ணை வாயால் அள்ளிப் போட்டுக் கொண்டு
சிலுவையைக் கடித்துக் கொண்டு, நிலாவையே
பார்த்துக் கொண்டிருந்தான். தெருக்காரர்கள்
ஒன்றிரண்டு பேர் லேசாகச் சமாதானம் செய்யப்
போக வசவுப் பேச்சுகளை வாங்கிக் கொண்டு
திரும்பினர்.
எனக்கு பத்தாம் வகுப்பு தேர்வு என்பதால்
ராத்திரி கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்தேன்.
மணி ரெண்டு மூணு இருக்கும்.
உலகம் உறங்கிய பின் ,உண்மை
விழித்தெழுந்தது .அவன் ஒரு பத்து நிமிடம் ,
அந்தோணியாகவே வாழ்ந்தான் ...
கதறிக் கதறி அழுதான் ... அந்த
அழுகையில் சட்டைக் கிழிப்போ ,சிலுவைக்
கடிப்போ இல்லை ... வெறும் அந்தோணி
மட்டுமே தெரிந்தான்.அவன்
அவனுக்காகவே வாழ்ந்த அந்த கனத்தை
வேறு யாரும் பார்க்கவில்லை என்றே நம்பினான் ..
எக்சாம் முடிந்த அடுத்த நாளே அப்பாவுக்கு
மாற்றலாகி மும்பை போகும் படியானது.
மூன்று வருடங்கள் கழித்து இன்று தான்
ஊர் திரும்புகிறேன் தனியாக .
'ஞாபகம் வருதே' என்று பாடும் அளவிற்கு
அந்த ஊரில் பெரிதான அனுபவங்கள் கிடையாது.
சொல்லப்போனால் என்னுடைய ஒரே ஆர்வம்
அந்தோணியைப் பற்றி தான்.
பின்வீட்டு கோவில் அர்ச்சகர் வீட்டில் தங்கும்படி
வீட்டில் உத்தரவு.
ஊர் வந்தது. கடைசி பஸ் பிடித்ததால் மணி
பத்தாகி விட்டது. இதோ நடந்து கொண்டிருக்கிறேன்
அந்தோணியின் பழைய நினைவுகளைச் சுமந்து.
மேரி ... ரஹீம் ... அந்தோணி ... ஆகாய வெண்ணிலா
எல்லாம் இன்னும் பசுமையாக ...
முதலில் கண்ணில் பட்டது 'ரஹீம் டைலர்ஸ்'
இப்பொழுது இரண்டு மாடி வைத்த கடையாகி
விட்டது. "ரஹீம் பணக்காரன் ஆயிட்டான் போலிருக்கு"
தார் ரோட்டில் இப்பொழுது ஒரு நாய் கூட இல்லை.
ராபிச்சைக்காரர்கள் இல்லை. நாயருக்கு இன்று
நைட் ஷிபிட் இல்லை போலும், டி.வீ..எஸ் 50
வாசலில் தூங்கிக் கொண்டிருந்தது.
நான் இருந்த வீடு வந்தது. அதை விட முக்கியம் ... அந்தோணி.
பெரிதாக மாற்றம் இல்லை. அதே புகையிலைக் கரை
படிந்த லாம்ப் போஸ்ட். அதே துவைக்கிற கல்,
அதைத்தாண்டி இதோ அந்தோணி வீட்டு வாசலில்.
"அந்தோணி ... "
"அந்தோணி ... "
மூன்றாவது முறை் கூப்பிடும் முன் லுங்கி
கட்டிய ஆசாமி வெளியே வந்தான். ரஹீம்.
"ரஹீம், யாரு தெரியுதா?"
"ஆ ... நீ அந்த ஐயிரு வீட்டுப் பையன் தானே"
"ஆமா ரஹீம். அந்தோணி இல்ல?"
"அவன் இங்க இல்ல ... ஊர விட்டு போய்ட்டான்"
"மேரி?"
"அது செத்துடிச்சு ... "
"என்னது ... எப்படி? "
"வயித்த வலி தாங்காம போய்டுச்சு ... நீ எப்படிக் கீற?"
அவன் கேட்டு முடிக்கும்முன் உள்ளிருந்து
"கவுன் ஹை?" என்று ஒரு பெண் குரல்
கேட்க இவன் கதவைச் சாத்தினான்.
அடுத்த நாள் ஊரில் விசாரித்ததில் ரஹீம் மேரியைக்
கல்யாணம் செய்து கொண்டதாகவும், மேரிக்குப்
பெண் குழந்தை பிறந்ததாகவும், வீட்டைத் தன்
பெயருக்கு மாற்றிக் கொண்டு ரஹீம் இன்னொரு
கல்யாணம் செய்து கொண்டதாகவும், தட்டிக் கேட்கப்
போன மேரியை விஷம் வைத்துக் கொன்றதாகவும்,
அந்தோணி மேரியின் குழந்தையை எடுத்துக் கொண்டு
ஊரை விட்டு போய் விட்டதாகவும் கேள்விப்பட்டேன்.
"காபி வேணுமோ? கொஞ்சம் இரு, ரஹீம் கிட்ட
தைக்க ப்ளௌஸ் கொடுத்திருக்கேன் ... வாங்கிட்டு
வந்துடறேன். கடை பாத்தியா ... எவ்வளவு பெருசு?"
சொல்லிவிட்டு நாயரம்மா கிளம்பினாள்.
ஊரை விட்டு கிளம்பு பொழுது அந்த துவைக்கிற
கல்லைப் பார்த்தேன்.
'ஆகாய வெண்ணிலாவே' இன்னமும் காற்றில் எங்கோ
கேட்டுக் கொண்டிருந்தது.
வீட்டுக்கு வந்தவுடன் தாத்தாவிடம் நடந்ததைச் சொன்னேன்.
"ஐயோ பாவமே ... நீ ஏண்டா இதுக்கு போய்
அலட்டிண்டு ... விடு ... கிறுக்குப் பய " என்றார்.
எனக்கு என்னவோ அந்தோணி என்றுமே பைத்தியம்
இல்லை என்றே தோன்றியது.

Saturday, July 11, 2009
அவன் மற்றும் அவள்
மனோ 'தினமஞ்சரி' நாளிதழின்
ரிப்போர்ட்டர். வாலிபன். இன்று
செவ்வாய்க்கிழமை, அவனுக்கு
பிடிக்காத நாள். ஏனென்றால், இன்று
செங்கல்பட்டில் ந்யூஸ் சேகரிக்க ட்யூடி.
செங்கல்பட்டு பற்றி அவனுக்குப்
பெரிதான அபிப்பராயம் இல்லை.
ஸ்பென்சர் இல்லை, அதனால்
அங்கே நவீன மயமாக்குதலை வைத்து
எதுவும் ஆர்டிகள் எழுத வாய்ப்பு இல்ல,
மெரீனா பீச் இல்லை, ஆதலால்
கள்ளக்காதளர்களை பற்றி எழுத
வழி இல்லை, சத்யம் சினிமா இல்லை,
இந்த தளபதி, அந்த தளபதிகளின் படங்களை
பற்றி எழுதவும் வழி இல்லை.
இப்படித்தான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்
தாம்பரத்தில் ட்ரைன் டிக்கட் எடுக்கும்
பொழுது நினைப்பான்.
டிக்கெட் கிடைத்தது. CJ என்று விகாரமாக
எழுதப்பட்டு பிராட் கேஜு ட்ரெயின்
வந்தது . உள்ளே சென்றமர்ந்தான்.
முதல் கடலையை வாயில் போடும்
பொழுது காலையில் பத்திரிகை ஆசிரியர்
தணிகாச்சலம் சொன்னது ஞாபகத்திற்கு
வந்தது.
"மனோ, வர வர நீ எழுதற ஆர்ட்டிக்கல்
சுவாரசியம் குறைஞ்சுக்கிட்டே வருது.
இன்னைக்காவது எதுவும் சோதா ந்யூஸ்
கொண்டு வராம சுவாரஸ்யமா
ஏதாவது கொண்டு வா"
செங்கல்பட்டுல என்ன எழுதறது அப்படி?
அங்கங்க ரெண்டு மூணு ஜாதி தகராறு
ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ நடக்கும்,
மணிரத்தினம் ரேஞ்சுக்கு சொன்னா கூட
ஒருத்தனும் விமரிசனம் கூட பண்ண
மாட்டேங்குறான். வேற எத பத்தி எழுத?
என்று நினைத்து முடிக்கையில் வண்டலூர்
வந்தது. நினைவுகள் தான் உலகத்துலயே
வேகமானது என்று தணிகாச்சலம் அடிக்கடி
சொல்வது நினைவிற்கு வந்தது.
காலேஜ் மாணவர்கள் இறங்கினர். அந்த ரயில்
பெட்டியில் ஏறியது இரண்டே பேர். அவன் மற்றும்
அவள். "நல்ல தலைப்பா இருக்கே" என்று
மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
மனோவால் பெயரிடப்பட்ட அந்த
அவன் கையில் ஒரு நோட் வைத்திருந்தான்,
உள்ளே ஒன்றும் இல்லை என்று அவன்
அதனை வைத்திருக்கும் பாங்கு சொன்னது.
அவள் கையில் கருப்பு மணிபர்ஸ்
வைத்திருந்தாள், அதற்குள்ளும் ஒன்றும்
இல்லை என்று அவள் காலில் அணிந்திருந்த
செருப்பு சொன்னது. மனோவின் எதிர்
இருக்கையில் வந்து உட்கார்ந்தனர்.
அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
அவள் முகத்தை அவன் பார்க்க வில்லை,
அவளும் தான், அதாவது அவன் முகத்தை.
மனோ FM கேட்டு கொண்டிருந்தான்,
ஆனால் ஓரப்பார்வை அவன் மற்றும்
அவள் மீது. அந்த அவன், சோம்பல்
முறித்தான், தலை சீவினான்,
கர்சீப்பால் முகம் துடைத்தான்.
அவள் சலனமில்லாமல் ஜன்னலைத்
தாண்டி ஊரப்பாக்கம் மற்றும்
கூடுவாஞ்சேரியை பார்த்து
கொண்டிருந்தாள். அந்த 9 நிமிட
மௌனம், மனோவை என்னவோ
செய்தது.
"யார் இவன், இவள், மொத்தத்தில்
இவர்கள்? பேசவில்லை, சிரிக்கவில்லை.
இளம் காதலர்கள் என்று முடிவு செய்து
கொள்வதா, அண்ணன் தங்கச்சி என்று
குதர்க்கமாக யோசிப்பதா, இல்லை,
வெறும் நண்பர்களா? எப்படிப் பார்த்தாலும்
மௌனமும் சோகமும் பொதுவானது
தானே. ஒரு விதத்தில் அந்த பெண்
கொஞ்சம் அழகு தான். மாநிறம்
ஆனாலும் அவளிடம் ஒரு ஈர்ப்பு
இருந்தது. ஆனால், சோகம் மட்டும்
ஏன் என்று புரியவில்லை மனோவிற்கு.
தணிகாசலம் மனோவின் ஆராய்ச்சியை
கலைக்கும் விதம் கால் செய்தார் ...
"என்ன மனோ, எங்க இருக்க?"
"சார், இன்னும் அரை மணி நேரத்துல
செங்கல்பட்டு போய்டுவேன் ... "
"அங்க ***** ஜாதிக்காரன் ***** ஜாதிக்காரனை
வெட்டிட்டானாம் ... போய் ஒரு சின்ன
ரிப்போர்ட் அனுப்பி வை ... ந்யூஸ்
பெரிசா இருந்தா அப்புறம் பார்த்துக்கலாம்.
எந்த எடம், என்ன விஷயம்'னு தெரிஞ்சவுடனே
மறுபடியும் கால் பண்ணி சொல்லறேன்"
***** என்று போட வேண்டியது காலத்தின்
கட்டாயம்.
மனோ சிக்னலுக்காக ட்ரைன் வாசல் படி
சென்று பேசியவன், திரும்பி வந்து பார்த்து
அதிர்ச்சி அடைந்தான்.
அவன் தோளில் அவள் சாய்ந்து
கொண்டு அழுது கொண்டிருந்தாள் .
மனோவிற்கு ஒன்றும் புரியவில்லை.
மனோ பார்த்ததைப் பார்த்து விட்டு,
கொஞ்சம் வெட்கப்பட்டு அவள்
துப்பட்டாவால் முகத்தை மூடிக்
கொண்டாள்.
"என்ன ஏது என்று விசாரிப்பதா?
இல்லை, நமக்கு என்ன ஆச்சு ...
அதெப்படி விட முடியும், நான் ஒரு
ரிப்போர்ட்டர், எனக்குன்னு ஒரு சமுதாய
பொறுப்பு இருக்கு ... பொல்லாத
பொறுப்பு, போன மாசம் இப்படித்தான்
சாட்சி சொல்லப் போய் போலிஸ்
ஸ்டேஷன்ல மூணு நாள் அலைக்கழிக்க
வெச்சிட்டானுங்க ... அதுக்காக
இப்படி விட்டுட முடியுமா?"
என்று மனோ தனக்குள்ளயே
குழம்பிக்கொண்டிருந்தான். திடீரென்று
முடிவிற்கு வந்தான்.
"தம்பி, யாருப்பா நீங்க?"
அவர்கள் இவனை சட்டை செய்யவில்லை.
மனோவிற்கு ஒரு மாதிரி இருந்தது.
"தம்பி, உன்ன தான் ... "
அவன் மீண்டும் அசட்டை செய்தான்.
"டேய் ... உன்ன தாண்டா ... " என்று
அதட்டலாய்க் கேட்டவுடன் அவன் பயந்து,
நிமிர்ந்து பார்த்தான்.
பயம் மட்டுமே உலகை ஆளும் என்று
தணிகாசலம் சொல்வார்.
"என்ன சார்? "
"யாருப்பா நீங்க ... ரெண்டு பேரும்? "
மௌனம்.
"தம்பி, நான் ஒரு பத்திரிகை நிருபர்.
என்னை நம்பி சொல்லலாம் ... ரெண்டு
பேரும் இப்படி அழுதுட்டு வரீங்க, ஒரு
வார்த்த பேசிக்கல ... சிரிக்கல ..
எங்கிருந்து வரீங்க ... எங்க போறீங்க?"
என்று தொடர்ச்சியாய் கேட்டு முடித்தான்.
கேள்வி அவனுக்கு தான், ஆனால் அவள்
தான் முதலில் அழுதாள்.
"இங்க பாரும்மா ... அழாதே ... அழரதுனால
ஒன்னும் நடக்காது ... விஷயத்த சொல்லு ... "
அவன் மனோ சொல்வதை கேட்காமல்
அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
"இப்போ சொல்ல போறீங்களா இல்லையா? "
"சார் ... " என்றான் அவன். மனோ எதிர்பார்த்த
பதில் கிடைத்து விட்டது.
"சொல்லுப்பா ... யாரு நீங்க? "
"சார், நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்.
ஆறு மாச பழக்கம் ... இவ BSC பர்ஸ்ட்
இயர். நானும் அதே காலேஜ் தான்.
பைனல் இயர். ரெண்டு பேரும்
செங்கல்பட்டு தான். எங்க வீட்டுல்ல
இதுல கொஞ்சம் கூட சம்மதம் இல்லை.
அவங்க வீடு அதுக்கு மேல ... "
"ஏன்?"
"ஏன்னா நாங்க ரெண்டு பேரும்
வெவ்வேற ஜாதி ... "
"என்ன ஜாதி?"
"வேணாம் சார் ... அது எதுக்கு?"
"அது சரி ... " என்று சிரித்துக் கொண்டான்.
"சரி, என்ன பண்ண போறீங்க? "
அந்த கேள்வியைக் கேட்டவுடன் அவன்
மறுபடியும் மௌனமானான் அவள் முகம்
இன்னமும் துப்பட்டாவால் மூடப் பட்டிருந்தது.
"தம்பி, உன்னை தான் ... "
"சார் தெரியல சார் ... ஆனா
உயிருக்கு உயிரா பழகிட்டோம் ...
என்ன விட்டா இவளுக்கு வேற
எதுவும் தெரியாது ... அதே மாதிரி
தான் எனக்கும் ... இவ இல்லாம
வாழ முடியாது ... " என்று
திடீரென்று அழத் தொடங்கினான்.
துப்பட்டா பெண், அவனை இப்பொழுது
சமாதனாம் செய்யத் தொடங்கினான்.
மனோவிற்கு சிரிப்பதா, அழுவதா
என்று தெரியவில்லை.
"தம்பி" என்று மறுபடியும் அதட்டலாய்க்
கூப்பிட்டான்.
"என்ன சார்?"
"இவள எவ்வளவு வருஷமா தெரியும்'னு
சொன்ன?"
"வருஷம் இல்ல சார் ... ஆறு மாசம் ... "
"ம்ம்ம் ... ஆறு மாசம் தானே ... ?"
காட்டாங்குளத்தூர் வந்தது ... யாரும்
ஏற வல்லை ... இறங்கவும் இல்லை ...
ஆனால் இங்கே தினமும் ட்ரெயின்
நிற்கும் விநோதம்.
"அதுக்காக என்ன சார் பண்ணறது ...
காதலுக்கு மாசம், வருஷம் .." என்று
அவன் பிரசங்கத்தை ஆரம்பித்தான்.
"ஸ்டாப் இட் ... அதெல்லாம் இருக்கட்டும் ...
இந்த விஷயத்தை உங்க வீட்டுல யார்
கிட்டயும் சொல்லலியா? "
"யாரும் புரிஞ்சிக்கற மாதிரி இல்ல சார் "
"சரி உங்க வீட்டுல ... " என்று மனோ
அவளைப் பார்த்து கேட்டான். அந்த
அவன் அதனை விரும்பவில்லை.
அவனே அவளுக்காக பதில் சொன்னான்.
"அவங்க வீட்டுல இன்னும் ரொம்ப
மோசம் தான். பாவம் சார் அவ ..."
என்று தேவையே இல்லாம் அவளைச் ச
மாதானம் செய்தான், அவள் லேசாய்
அழத் தொடங்கினாள். அவன்
இதற்காகவே காத்திருந்தது போல்,
இன்னும் நெருக்கமாய் சமாதானம்
செய்தான். மனோவிற்கு இந்த
மொத்தக் காட்சியும் பிடிக்கவில்லை.
"தம்பி, அப்புறம் சமாதானம் செய்யலாம் ...
என்ன படிக்கறேன்னு சொன்ன?"
"பைனல் இயர் சார் ... "
"என்ன பண்ணப் போற?"
"தெரியல சார் ... எங்கம்மா கிட்ட
பேசி எப்படியாவது சம்மதம் வாங்கணும் ... "
"அத கேக்கல ... படிச்சிட்டு என்ன
பண்ண போற ..."
அவனிடமிருந்து பதிலில்லை. வெற்றாய்ப்
பார்த்தான். அவன் கேள்வியிலிருந்து
தப்பிப்பதற்காக அவளை சமாதானம்
செய்தான்.
"உன்ன தான் கேக்கறேன் ..."
"பிச்சை எடுத்தாவது இவள காப்பாத்துவேன்
சார் ... "
"எப்போதிலிருந்து?"
இந்த கேள்வி பிச்சை எடுப்பதற்கா
அல்லது காப்பாற்றுவதற்கா என்று
அவன் குழம்பிப் போனான்.
"சரி அது இருக்கட்டும் ... உங்க ரெண்டு
அப்பாவும் என்ன பண்ணறாங்க ... "
"சார் ... ரெண்டு பேரும் கூட்டுறவு
ஆபிஸ்ல வேல பாக்குறாங்க.
இன்னைக்கு தான், எங்கப்பா கிட்ட
எங்கம்மா விஷயத்த சொன்னாங்க.
அவர் என்னப் பார்த்தார்னா
கொன்னுடுவாரு ... "
"உங்கப்பாவுக்கு இன்னைக்கு தான்
தெரியுமா? பின்ன எத வெச்சி,
வீட்டுல காதலுக்கு பயங்கர
எதிர்ப்புன்னு சொல்லற?"
"எங்கண்ணனும் பக்கத்து வீட்டு
மல்லிகாவ லவ் பண்ணாரு.
ரெண்டு பேரும் வேறே ஜாதி.
எங்கப்பா அதுக்கு ஒத்துக்கல ...
பாவம் எங்கண்ணன், இப்போ வாழப்
பிடிக்காம அண்ணியோட
வாழ்ந்துகிட்டு இருக்காரு ... "
அவள் எங்கோ வெற்றாய்
பார்த்துக்கொண்டிருந்தாள்.
"சரி, நீ அவங்க வீட்டுக்கு போய்
பேசலாமில்ல?"
"அய்யயோ, அவங்கப்பா பொல்லாதவரு"
என்று அவன் சொன்னதைக் கேட்டு
அவளுக்குக் கோபம் வரவில்லை.
"சரி, என்ன தான் இதுக்கு முடிவு? ?"
"எங்க குடும்பத்துக்கு பாடம் கற்பிக்க
போறோம்"
வண்டி நிறுத்திய சட்டத்தில் அவன்
சொன்ன பதில் மனோவுக்குக்
கேட்கவில்லை.
"என்ன செய்ய போறீங்க?"
இந்த கேள்விக்கு அவர்கள் பதில்
சொல்லாமல் மனோவைப் பார்க்க
முடியாமல் தலை குனிந்து கொண்டனர்.
செங்கல்பட்டு வந்தது. அவன்
அவள் கையை பிடித்து கொண்டு
குழந்தை போல் அழைத்துச் சென்றான்.
மனோவுக்கு அவர்களின் காதல்
முட்டாள்தனத்தின் மொத்தமுமாய்
பட்டது. அவர்களை ஆச்சரியமாய்
பார்த்து கொண்டிருந்தான்.
"என்ன பொறுப்பில்லாத வாழ்க்கை.
காதலாம், கத்திரிக்காயாம், சாதியாம் ...
அவ இன்னும் படிக்கவே ஆரம்பிக்கல,
இவன் படிச்சு முடிக்கல, அடுத்து பிச்சை
எடுக்க போறானாம், அவல காப்பாத்த
போறானாம். இவங்க எல்லாம் இந்த
பூமிக்கு பாரம் ... பேசமா ஒண்ணு
செய்யலாம் ... தற்கொலை பண்ணிக்கிட்டு ... "
என்று மனதிற்குள் சொல்லி முடித்தவன்,
ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆனான்.
"ஒரு வேலை தற்கொலை பண்ணிக்க
போறாங்களோ? அந்த பொண்ணோட
சோகம், மௌனம், அவன் வார்த்தையில
இருந்த விரக்தி, முட்டாள்தனம்,
இயலாமை ... எஸ் .. கண்டிப்பா இவங்க
ஏதோ பண்ணப் போறாங்க "
மனோ அவர்கள் சென்ற வழியைத் தேடினான் .
தெரியவில்லை ... எங்கேயாவது பளீர்
பச்சை துப்பட்டா தெரிகிறதா என்று
பார்த்தான்.
"சே ... நான் என்ன மனுஷன்?
அவங்க கிட்ட நாலு வார்த்த ஆறுதலா
சொல்லாம, போலிஸ் மாதிரி விசாரணை
பண்ணிக்கிட்டு இருந்தேனே ... சே ...
எங்க இவங்க ... ஒரு வேல
சாகறதுக்கு முன்னாடி என் கிட்ட
உண்மைய சொல்லணும்'னு தோணிச்சோ
என்னவோ ... அடடா, ஏண்டா தற்கொலை
பண்ணிக்கிற ... உன் கிட்ட என்ன இல்ல ...
சரி, எதுவும் இல்ல, அதுக்காக
தற்கொலை தான் வழியா ... மூட்டைத்
தூக்கலாம், பஞ்சு மிட்டாய் விக்கலாம் ...
என்ன ஆச்சு எனக்கு ... இப்படி
உளறிகிட்டு இருக்கேன் ..."
தூரத்தில் ஒரு பெண்ணும்
பையனும் நடந்து போவது போல்
தெரிந்தது ... பச்சையா நீளமா
என்று தெரியவில்லை, ஆனால்
துப்பட்டா போட்டிருந்தாள். எதிரே
ஒரு கூட்ஸ் வண்டி வந்து கொண்டிருந்தது.
மனோ வேகமாய் ஓடினான்.
அவசரமில்லாத அந்த மத்தியான
ஸ்டேஷனில் மனோ மட்டும் சென்ட்ரலில்
ஓடுவது போல் ஓடிக்கொண்டிருந்தான்.
"கூட்ஸ் இல்லை ... பேசஞ்சர் வண்டி"
அவர்கள் கையை பலமாக கட்டிக்
கொண்டு சென்றனர் ... மனோவிற்கு
'புன்னகை மன்னன்' நினைவிற்கு
வந்தான். ஆனால், அதனை
ரசிக்க முடியவில்லை ... இன்னும்
ஒரு அடி வேகமாய் ஓடினான்.
அவளின் துப்பட்டா கீழே விழுந்தது.
அவன் எடுத்துக் கொடுத்தான்.
டென்ஷனில் வியர்த்தான். அவர்கள்
பிளாட்பாரத்திலிருந்து இறங்கினர்.
போன் அடித்தது. தணிகாச்சலம்.
"ஆ மனோ ... நீ போக வேண்டியது
கூட்டுறவு ஆபிஸ். ஏதோ காலேஜ்
பசங்க லவ் மாட்டாராம் ... விஷயம்
கேள்விப்பட்டு அவங்க அப்பாங்க
ஒருத்தர ஒருத்தர் வெட்டிகிட்டு ... "
சொல்லி முடிப்பதற்குள் அந்த பேசஞ்சர் வண்டி ...

Sunday, July 5, 2009
சாமக்கோழி
கொலை செய்யறது எல்லாம் ஒரு
குத்தமா சார்? நான் என்ன தெரிஞ்சா
பண்ணேன்? நீங்க சைவமா, அசைவமா?
இருங்க சார், யாரோ என்ன கூப்பிடற
சத்தம் கேக்கறது.
ஆ .. எங்க விட்டேன், அதான் சார்,
நான் சைவம், சுத்தமான தஞ்சாவூர்
வடமா புள்ள. இன்னைய தேதிக்கு
முட்ட கூட தொட்டதில்ல. ஏன், பூண்டு
கூட கும்பகோணம் பக்கம் போனா லாலு
மெஸ்ஸ்ல ரசத்துக்கு மட்டும் தான்.
அதுல கொத்தமல்லி மிதக்குமே ... பேச்சு
திசை மாறுறதுன்னு நினைக்கிறேன்.
நான் கோவிந்தன், செல்லமா 'கோண்டு'
அப்படின்னு கூப்பிடுவா.
சார் நீங்க அசைவமா? அப்படின்னா, இது
வரைக்கும் எத்தன கோழி சார் கொன்னுருப்பீங்க,
சரி, நீங்க கொல்லல, ஒத்துக்கறேன், எத்தன
சவக்கோழிய கொரிச்சிருப்பீங்க. நூறு, இருநூறு,
அட எண்ணிக்கை எதுவானா என்ன, அதுவும்
கொலை தான சார்.நான் சாப்பிட்டதும் அப்படி
ஒரு கோழி தான், தெரிஞ்ச கோழி தான்,
சாமக்கோழி, சிக்கான 'பெண்' கோழி.
நான் இப்போ தஞ்சாவூர் போயிண்டு இருக்கேன்.
எதுக்கா? என் ஆம்படயா (பொண்டாட்டி)
கைக்கொழந்தயோட அவ அம்மா ஆத்துக்கு
போயிருக்கா. ஒரு வாரத்துல வரேன்னு சொல்லிட்டு
போனவோ, இன்னும் ஆளைக்காணும். அதான்
என்னன்னு நேர்ல போய் ... இருங்க சார்,
யாரோ கூப்பிடறாப்புல இருக்கு.
ஆ .. எங்க விட்டேன், ...
எதுக்கு கொலை பண்ணேன், ஏன் கொலை
பண்ணேன்னு உடனே ஒரு புது ஆவல்
வந்திருக்குமே, ஆமா, செஞ்ச எனக்கே
அப்படித்தான் இருந்தது. ஒரு வேகத்துல
பண்ணிட்டேன். நான் என்ன தெரிஞ்சா சார்
பண்ணினேன் ?
உங்கள காக்க வெக்கனும்னுட்டு எல்லாம்
இல்ல சார், இருந்தாலும் நான் பேசிண்டே
இருக்கேன், நீங்க கேட்டுண்டே, அதான் சார்,
படிச்சுண்டே வாங்க. கல்யாணி இருக்காளே,
யாரு கல்யாணியா? ஆமா, உங்களுக்கு
எப்படித்தெரியும் கல்யாணிய, நீங்க என்ன
அவ கிட்ட செருப்படி வாங்கி இருக்கீங்களா
அவளைப் பத்தி தெரிஞ்சிருக்க. ஆமா சார்,
அத ஏன் கேக்கறீங்க, வெக்கமே இல்லாம
சொல்லறேன் பாருங்க!!!
ஒரு நாள் இடுப்புல தண்ணி எடுத்துண்டு
லைப்ரேரி கிட்ட போயிண்டு இருந்தா சார்.
மஞ்ச தாவணில பாவனா கணக்கா இருப்பா சார்.
என்ன நட, அடடடடடா சிக்குன்னா அப்படி ஒரு
சிக்கு,
எங்க விட்டேன், ஆம் ... மஞ்ச தாவணில
விட்டேன், மஞ்சள் எல்லாம் ஈஷிண்டு, அந்த
காலத்து சீதாவும் இதோ இந்த பாவனா மாதிரியும்
வெள்ளரிப்பிஞ்சுல த்ராட்சைய ... சரி சரி ...
விஷயத்துக்கு வா அப்படீங்கறீங்களா ...
அப்படி இருந்தா சார்.
"என்ன, புதுசா இருக்கு?"
"என்ன வேணும் உங்களுக்கு?"
"நீ தான் வேணும்"
"என்ன விளையாட்டா இருக்கு. எங்க சித்தப்பா யாரு
தெரியும்மில்ல?"
"நான் யாருன்னு தெரியும் இல்ல உனக்கு? என்னடி"
அப்படின்னு சொல்லி முடிக்கல சார், பளார்னு
அறைஞ்சிட்டு போய்ட்டா. அட கையாள இல்ல
சார், செருப்பால, சும்மா சொல்லக்கூடாது,
நல்ல வலு, செருப்புக்கு, இன்னும், இதோ
இங்க பாருங்க, இந்த இடது கன்னத்துல.
கடைசி வரைக்கும் தழும்பு இருக்குமாம்.
அன்னைக்கு ராத்திரி கடத்தெருவுல தம்
வாங்கிண்டு வரேன், ரொம்ப தான் சார் இந்த
பொண்ணுங்களுக்கு. ஏன் சார், பாவனா மாதிரி
இருப்பான்னு தான சொன்னேன், பாவனான்னு
சொல்லலயே ... அது எப்படி சார், எல்லா
பொண்ணுங்களுக்கும் இப்படி ஒரு திமிரு.
நல்ல பொண்ணு தான் சார், தெரிஞ்ச குடும்பம்
தான், அவா சித்தப்பா எல்லாம், எங்கக்கா
பெரிய நாத்தனார் கூட படிச்சவர் தான். ஆனா
இவ ரொம்ப ராங்கி சார். லவ் பண்ணறது
தப்புன்னா, இதோ இப்படி அந்தரங்கமான
விஷயத்த எழுதறது கூட தப்பு தான், ஏன்,
என் சொந்த கதையை வெக்கமில்லாம
படிச்சிண்டு இருக்கீங்க, அதுவும் தப்பு தான
... இல்ல, என்ன சொல்ல வரேன்னா,
புரியறது மேல போன்னு சொல்லறீங்களா? சரி.
அதாவது சார், ஒரு அழகான பொண்ணப்
பாத்ததும் லவ் வருது சார். மனசு ம... இதெல்லாம்
பார்த்து லவ் பண்ண முடியுமா சார், எப்படி சார்
மனசு தெரியும், காலா காலமா ஒண்ணா
சேர்ந்து வாழ்ந்துண்டு இருக்கற, இருந்த
தம்பதிங்க கூட கடைசி வரைக்கும் ஒருத்தர
ஒருத்தர் புரிஞ்சிக்கரதில்ல. ஏன்னா மனசு
நிரந்தரம் இல்ல, அப்போ அழகு மட்டும் என்ன
கேடுன்னு கேட்டா அட்லீஸ்ட் கண்ணுக்கு
பளிச்சின்னு சொல்லராப்புல இருக்கில்ல, இதோ
இவ பாவனா மாதிரி இருக்கா, மூலக்கட மணி
தங்கச்சி சாந்தா மீனாவாட்டமா இருப்போ,
அவ ரெண்டாவது தங்கை வனஜா ... ஆனா
இவ மனசு இப்படி அவ மனசு அப்படின்னு
யாராவது சொல்ல கேட்டிருக்கீங்களா?
இல்லையே ... பின்ன எது ஜெயிக்கிறது?
என்ன எழவோ நீயே அதையும் சொல்லித்தொலைன்னு
சொல்லாதீங்க சார், மனசு வலிக்க தான் சொல்லறேன்.
அதுக்கு அடுத்தவாரம், நான், கணேசன்,
இப்ராஹீம் எல்லாரும் செகண்ட் ஷோ பார்த்துட்டு
வரோம், இவ வாசலில ஒக்கார்ந்துண்டு யார் கூடவோ
ரொம்ப நேரமா பேசிண்டிருந்தா. எனக்கு இதெல்லாம்
பிடிக்காது சார், வீணா நேரம் தான் தேவையில்லாம
வெரயமாகும். நேரா போய் கேட்டுட்டேன்.
"என்ன கல்யாணி?"
"ஆ .. சரி அப்புறம் என்ன ஆச்சு"
இது எனக்கு கொடுத்த பதில் இல்ல, அந்த பக்கம்
எதோ பொண்ணோ பையனோ அதுக்குக் கொடுத்த
பதில்.
"கல்யாணி உன்ன தான் ... "
"போச்சு போ ... ம்ம்ம் ... அப்புறம்"
"ஏண்டி ...."
"ஹலோ ... உன்ன இல்ல ... ஒரு நிமிஷம்
இரு ... என்ன வேணும் உங்களுக்கு?"
"என்ன இந்த நேரம் கேட்ட நேரத்துக்கு போன்ல ...
ஆத்துக்குள்ள போய் பேசு "
"நான் எங்க பேசினா உங்களுக்கென்ன?"
"என்ன வாயாடிண்டு ... சொன்னா போக
மாட்டியா?"
"கெட் தி ஹெல் அவுட் ஆப் ஹியர் "
அப்படின்னுட்டு உள்ள ஓடிட்டா சார்.
இது முடிஞ்சுதா, ரெண்டாவது நாள், அவா
ஒண்ணு விட்ட மாமா தவறிட்டாராம், அதுக்கு
அவா சித்தப்பா, சித்தி எல்லாரும் ராத்திரியோட
ராத்திரியா கடலூருக்கு கெளம்பிட்டா.
இவளுக்கோ எக்சாம் நடக்கறது. எப்படி
போவோ, அவா சித்தப்பா வந்து வாயாலா
கெஞ்சிக் கேட்டார். எங்காத்துளையும் ஊருக்குப்
போய் பத்து நாள் ஆச்சு. ஆனாலும் ரொம்ப
தெரிஞ்ச பையங்க்ற நம்பிக்கையில கேட்டார்.
இவளுக்கு துளி கூட இஷ்டமில்லை, எனக்கும்
தான். சரி சரி ... ஒத்துக்கறேன் ... இஷ்டம்
தான்.
ஒரு வார்த்த ... ஒரு வார்த்த கூட பேசாம,
புக்காத்துக்கு வந்தாப்புல கால் படாம நடந்து வந்து
நேரா மாடிக்கு போனா. எனக்கு நெறைய உணர்ச்சிகள்
வெளிப்பட்டது சார்.
அது, தனியா வயசு பையன் இருக்கற ஒரு
ஆத்துக்கு வந்து ராத்திரி தூங்க வேண்டியதா
போச்சே அதுக்காக அவ மேல ஏற்பட்ட பச்சாதாபமா,
பின் தலைல எட்டிப்பார்த்த சபலமா, இல்ல இவ
மேல ரொம்ப நாள் தேக்கி வெச்சிருந்த செருப்படி
வாங்கின கோபமா, எதுன்னு சரியா சொல்லத்தெரியல
சார். ஒரு கப் காப்பி குடிச்சிட்டு படுக்க போனேன்.
ராத்திரி சரியா மணி ரெண்டு மூணு இருக்கும்,
கதையே இங்க தான் சார் ஆரம்பிக்கறது.
"கோண்டு, கோண்டு ... தூங்கிட்டியா? "
"என்ன கல்யாணி"
தலை முடி எல்லாம் கலைஞ்சு
பாதித்தூக்கத்துல பயந்து போய் இருந்தா.
எனக்கு அவளை அப்படிப் பாக்கும் போது
பச்சாதாபமா இருந்தது.
"அது ... வந்து ... அது"
"என்ன வந்து போயி ..."
"இல்ல, எனக்கு தனியா படுக்க பயமா
இருக்கு ... "
"அதுக்கு"
"நான் இங்கயே படுத்துக்கட்டுமா? "
"இல்ல ... சரி ஒகே"
"நீ?"
"நான் ஹாலுக்குப் போறேன்"
"சாரி ... என்னால உனக்கு சிரமம்?"
"கல்யாணி, நீ இங்க தூங்கு, கவலைப்படாத ...
கதவ வேணும்னா தாப்பாள் போட்டுக்கோ"
"கோண்டு, தேங்க்ஸ்"
"இதுல என்ன இருக்கு" அப்படின்னு
கொட்டாவி விட்டுண்டே மாடிக்கு போய்ட்டேன்
சார். . அவ நான் போனத பார்த்ததுக்கு
அப்புறமா தான் தூங்கப் போனா.
அடுத்த நாள் மத்தியானம் அவ சித்தப்பா
வந்த அடுத்த ஷணமே கெளம்பிட்டா.
"கோண்டு ... "
"என்ன கல்யாணி"
"சாரி .... இல்ல இல்ல ... தாங்க்ஸ்"
"என்ன கல்யாணி, நாம என்ன அசலா?"
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு
தெரியாம, சம்ப்ரதாயத்துக்குச் சிரிச்சு வெச்சு
கெளம்பிட்டா. போதாததுக்கு அவா ஆத்து கேட்
தெறந்து திரும்பிப் பார்த்து சிரிச்சா.
உடனே, காதல் கொண்டேன் அப்படின்னு
நினைப்பேன்னு பாத்தீங்களா, அடப்போங்க சார்,
இந்த பொண்ணுங்க ரொம்ப வித்தியாசமான
காரக்டர் சார். இது வரைக்கும் படிச்சீங்க, இப்போ
அவ என்ன நெனச்சிண்டு இருப்பான்னு தோன்றது.
குறைந்தபட்சம் மூணு சதவிகிதம் என் மேல
நல்ல அபிப்பிராயம் வந்திருக்கும்னு நெனச்சா,
நீங்க தான் சார் ரெண்டாவது முட்டாள்.
நான், முதல்.
முன்னெல்லாம் ரோட்டுல எதிர்ல வந்தாக்கா,
போனா போறதேன்னு நிமிந்தாவது பாப்போ,
இப்போல்லாம் அதுவும் இல்ல. திரும்பவும்
நான் அவல நெனச்சுண்டு கண்ட கண்ட
கவிதை எல்லாம் எழுத நெனச்சு,
வேணாம்டா அப்படின்னு சுஜாதா
புக் படிக்க உட்கார்ந்துனுடறேன்.
ஆனா என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ,
உச்சிப் பிள்ளையாருக்கு நூறு தேங்கா
உடைக்கறேனுட்டு வேண்டிண்டனே,
அதுவா, இல்ல என்னோட அழகப் பார்த்துட்டு
மயங்கிட்டாலா, இல்ல அன்னைக்கு ராத்திரி
நடந்தத நெனச்சுண்டு என் மேல ஒரு 'இது'
வந்திருத்தான்னு தெரியல சார் ... எண்ணி
நாளே மாசத்துல அவா சித்தப்பா எங்காத்துக்கு
வந்து பேசி ...
இதோ கல்யாணமும் ஆகி சந்தோஷமா
ரெண்டு வருஷம் ஓடிப்போயிடுத்து, இப்போ
அவ கைக்கொழந்தையோட தஞ்சாவூர்ல அவ
அம்மா ஆத்துக்கு ....
இருங்க சார், யாரோ என்ன கூப்பிடற சத்தம்
கேக்கறது.
"கோண்டு, கோண்டு ... தூங்கிட்டியா? "
மஞ்சள் தாவணில ரொம்ப அழகா இருந்தா
சார். பின் தலைல எட்டிப்பார்த்த சபலத்துல,
அப்படியே அவளைத் தூண்ல சாய்ச்சு ... ஒரு
உணர்ச்சி வேகத்துல தப்பு பண்ணிட்டேன் சார்.
ராத்திரி பூரா அழுதுண்டு இருந்தா ...
அடுத்த நாள், ஊரு ஒண்ணு கூடி எனக்கு
கல்யாணம் செஞ்சு வைக்கணும்'னு முடிவு
பண்ணிட்டா. யாருக்கா? சொன்னா நம்பவா
போறீங்க? கல்யாணிக்குத் தான்.
அப்புறம் என்ன ஆச்சு ... கல்யாணம் ஆகி
சந்தோஷமா ரெண்டு வருஷம் ஓடிப்போயிடுத்து,
இப்போ அவ கைக்கொழந்தையோட தஞ்சாவூர்ல
அவ அம்மா ஆத்துக்கு ....
இருங்க சார், யாரோ என்ன கூப்பிடற சத்தம்
கேக்கறது.
"கோண்டு, கோண்டு ... தூங்கிட்டியா? "
தலை முடி எல்லாம் கலைஞ்சு பாதித்தூக்கதுல
அப்படி அவள பார்த்தவுடனே, அதுவும் நல்ல
அருமையான கனவு காணும் போது,
அத கெடுத்ததால பயங்கர கோபமா வந்தது.
"அது ... வந்து ... அது"
"என்ன வந்து போயி ..."
"இல்ல, எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு ... "
ஹாலுக்குப் போய் படுக்க சொன்னா சார் ...ரொம்ப
நாள் தேக்கி வெச்சிருந்த கோபம் வெளில
வந்துடுத்து சார். புடிச்சி ஓங்கி தள்ளி
விட்டேன் ... என் நேரம், எங்காத்து
தூண்ல இருந்த தாத்தா காலத்து ஆணில
குத்தி, ரெண்டு நிமிஷத்துல பொட்டுன்னு
போய்ட்டா ...
கொலை செய்யறது எல்லாம் ஒரு குத்தமா
சார்? நான் என்ன தெரிஞ்சா பண்ணேன்?
நீங்க சைவமா, அசைவமா?

Friday, July 3, 2009
மீண்டும்
பழைய பங்களா. பழைய என்றால்
ரொம்ப பழைய. நம் தமிழ் திகில்
படங்களில் (மட்டுமே) இந்த மாதிரி
வீடுகளைப் பார்க்கலாம். மலைப் பிரதேசம்,
அமைதியான இடம் என்ற ஒரே காரணத்திற்காக
நிதின் விரும்பி வாங்கிய வீடு.
"டாட் , இன்னும் எவ்வளவு நேரம்?"
"வெயிட் பண்ணுடா ... இன்னும் 32
ஹார் பின் பேன்ட்ஸ் தான். வாட்ச்ல
டைம் செட் பண்ணிக்கோ. இன்னும் சரியா 25
நிமிஷத்துல வீட்டுக்கு போய்டலாம்.
ஜீப் 20 - 30 - 45 - 50 என வேகத்தைக்
கூட்டி, வளைவுகளைச் சமாளித்து காற்றைக்
கிழித்தது.
"நிதின், இட்ஸ் ஒகே ... டேய் ... சும்மா
இருடா ... பத்து நாள் ஜாலியா, ஸ்பீடா
சுத்தினது போதாதா? நிதின், ப்ளீஸ், ஸ்பீட
கொறைங்க, எனக்கு வாந்தி வரா மாதிரி
இருக்கு.
நிதின் - அகல்யா ஆதர்ஷ தம்பதிகள்.
கல்யாணமாகி 10 வருடங்கள், சுமனுக்கு
வயது 12. அந்த அளவிற்கு
அன்னியோன்னியம்.
வீடு வந்தது.
"டாட் , என்ன ரொம்ப டயர்டா
இருக்கீங்க?"
"இல்லடா ... ஒரே மயக்கமா இருக்கு ...
நம்ம டூர் போடோஸ் பாக்கணும், காமெராவ
எடு ... "
"அகல்யா கண்ணாடிக்கு முன் சென்று தன
முன்னழகைப்பார்த்தவாறு புடவையை மாற்றினாள்.
சுமன் காமராவை அக்கு வேறு ஆணி வேறாக
பிரிக்க, நிதின் இங்கே அகல்யாவை ...
பின்னால் வந்து அவளைக் கட்டி
அணைத்தான்.
"கமான் நிதின் ... ப்ளீஸ் நிதின் மெச்சூர்டா
பிஹெவ் பண்ணுங்க ... சுமன் வந்துற
போறான் ... நிதின் ..."
கொஞ்சம் குரலை உயர்த்தினாள்.
"என்ன அகல்யா, நான் இங்க சுமன் கூட
வேலையா இருக்கேன், என்ன வேணும்?"
வாட் ... ஆ ..."
உள்ளே எதோ சத்தம் கேட்க. சென்று
பார்த்தால் அகல்யா மயக்கம் போட்டு
விழுந்து கிடந்தாள்.
"அகல், அகல் ... என்ன ஆச்சு?"
நிதின் ஒரு மனோ தத்துவ மருத்துவர் தான்.
"சுமன், சாய் வீட்டுக்கு போய் விளையாடிட்டு
ஒரு மணி நேரம் கழிச்சு வா ... "
"என்ன ஆச்சு டாட் அம்மாவுக்கு ... "
"ஒண்ணும் இல்லடா ... பத்து நாள் சுத்தினது
களைப்பா இருக்கும். ஷீ நீட்ஸ் ரெஸ்ட்.
வரும் பொது சாய் வீட்டுல இருந்து ஒரு
பீஸ் லெமன் இருந்தா வாங்கிட்டு வா. "
"அப்பா, அம்மாவுக்கு ... "
"சுமன், ப்ளீஸ் லீவ்"
"அகல், கம் ஆன்... எழுந்துக்கோ ... கெட் அப்"
"அகல் ... "
முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவளை
கட்டிலில் சாய்த்து படுக்க வைத்தான்.
சரிந்த புடவையைக் போர்த்தி விட்டான்,
கால் மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்தது.
"நிதின் ... "
"சொல்லு அகல், என்ன ஆச்சு ... "
"நிதின்" குழப்பமாக பார்த்தாள்.
"நிதின், எனக்கு எப்படி சொல்லறதுன்னே
தெரியல ... நான் புடவை மாத்தும் பொது
எங்க இருந்தீங்க? "
"ஏன் ... சுமன் கூட நம்ம டூர் போடோஸ்
பாத்துக்கிட்டு இருந்தேன் ... "
"நிதின் ... " அவன் மடியில்
சாய்ந்தாள்.
"ஐ பீல் ஹான்டட் ... யாரோ என்ன
பின்னால வந்து கட்டி பிடிச்சாங்க ... "
"டோன்ட் பீ ஸ்டுப்பிட் அகல். நான்
இருக்கும் போது எவன் வந்து ... "
"நோ நிதின் ... யாரோ என் பின்னால்
வந்தாங்க, நான் ப்ளீஸ்னு சொல்லும்
போது என்ன உராயரா மாதிரி இருந்தது.
நீங்க தான்னு நெனச்சி திட்டினேன்.
பதிலுக்கு நீங்க ஹாலுல இருந்து குரல்
கொடுத்தீங்க ... நிதின் எனக்கு அதிர்ச்சி
இன்னும் போகல"
"அகல், உனக்கு பயணக்களைப்பு,
மணி எட்டாச்சு. நீ ரெஸ்ட் எடு. சுமன்
இன்னும் ஒன் ஹவர்ல வந்திருவான்,
சாய் வீட்டுக்கு அனுப்பிச்சு இருக்கேன்"
"எதுக்கு இந்த நேரத்துல அனுப்பிச்சீங்க"
அவள் கேட்டு முடிக்கும் முன்
"டாட் ... சாய் வீட்டுல யாருமே இல்ல.
வீடு பூட்டி இருக்கு"
"இட்ஸ் ஒகே ... வா சாப்பிடலாம். கவர்ல
இருந்து ப்ரெட் எடு"
"அகல்யா சாப்பிடறயா?"
அந்த ஹால் முக்கோண வடிவில் இருக்கும்.
மொத்தம் மூன்று அறைகள் கீழே. மலை
வீடு என்பதால் வீட்டிலேயே குளிர் காயும்
அடுப்பும் உண்டு. மாடியில் இரண்டு அறைகள்,
அதற்கும் ஏணிப்படி வழியாகத்தான் போக
வேண்டும்.இந்த வீட்டிற்கு இப்பொழுது வயது
57. நிதின் வாங்கும் பொழுது 51. அகல்யாவும்
நிதினும் தனிமை விரும்பிகள், அதற்காகவே
ஒரு வருடம் பொருத்து வாங்கிய வீடு. பக்கத்தில்
மலை எஸ்டேட், ஒரு கிலோமீட்டர் தொலைவில்
டீத்தொட்டம். வீட்டிற்கு பின்புறம் யூக்கலிப்டஸ்
முள் காடு.மொத்தத்தில் பணக்காரர்களின்
பண்ணை வீடு, இவர்களுக்கு நிரந்தர வீடு.
"நிதின், விளையாடாதீங்க, நீங்க கண்டிப்பா
ஹாலுல தான் இருந்தீங்களா? இல்ல என்ன
பயமுறுத்தனும்னு ஏதாவது கேம் ப்ளே
பண்றீங்களா?"
"அம்மா, என்ன ஆச்சும்மா உங்களுக்கு?"
"சுமன், கிச்சனுக்குப்போய் ஜாம் பாட்டில்
எடுத்துட்டு வா ... "
"அம்மா, ஐ யாம் ஆஸ்கிங் யூ ... "
"சுமன் .... ஜஸ்ட் கோ ... " அவன்
அதட்டலுக்கு பயந்து உள்ள விரைந்தான்.
"அகல், ஸீ, நான் ஹாலுல தான் இருந்தேன்.
நீ சாப்டுட்டு தூங்கு மொதல்ல. நான் இன்னும்
ஒன் ஹவர்ல பெட்டுக்கு வரேன்"
"நிதின் ... இல்ல ... நான் இங்கயே
தூங்கறேன். ஆனா, நீங்க என் கூடவே இருங்க"
"ஒகே டியர் ... வேணும்னா இன்னைக்கு"
"நோ நோ ... நான் அத மீன் பண்ணல நிதின் ...
என் கூடவே உட்காருங்க. நான் தூங்கிட்டா கூட
மாடிக்கு போய்டாதீங்க. நிதின், இந்த வீட
நாம கண்டிப்பா வாங்கி இருக்கனுமா?"
"அகல், நீ ரொம்ப குழம்பி இருக்க ... சின்ன
விஷயத்துக்கு போய் ஏன் இப்படி கன்பியுஎஸ்
பண்ணிக்கிற .... எல்லாம் பிரம. நீ முதல்ல
சாப்பிடு ... சுமன்"
"டாட் ... பிரிட்ஜ் காலியா இருக்கு. என்னோட
பேவரைட் டாப்லரோன் கூட காணும் ... ஷிட்,
தெரிஞ்சிருந்தா வரும் போது வாங்கிட்டு
வந்திருக்கலாம் "
அவன் சொன்னதை நம்பாமல், கண்ணால்
பார்த்து அதிர்ந்தான்.
"சம்திங் இஸ் ராங்"
சுமன் அந்த கார்ட்லெஸ்ஸ எடு.
"அப்பா, நான் வரும் போதே பாத்துட்டேன்.
போன் டெட்டா இருக்கு. "
"வாட் ... என்ன நடக்குது ... "
நிதின் உடனடியாக டீவீ, போட்டுப்பார்த்தான்.
வேலை செய்தது.
சுமன், மாடி சாவிய கொண்டு வா.
ஏணிப்படியில் பாசி படிந்திருந்தது. இவன்
வருவதைப்பார்த்ததும்மரபல்லிகள் இடத்தைக்
காலி செய்தன.
"சுமன், நீ அம்மா கூட இரு. நான் மாடிக்கு
போய் எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு
வந்துடறேன்"
அடர்பனிக்காற்றில் கால் தடுமாற மெதுவாக
மாடி ஏறிச்சென்றான்.
கதவைத்திறக்க முற்பட்ட பொழுது ... அங்கே ...
விடிந்தது.
"நிதின், நிதின் ... "
"நிதின் ... என்ன ஒடம்பெல்லாம் நெருப்பா
கொதிக்குது?"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல"
"என்ன நிதின், வாய் கொழறுது ... "
"அகல் ... நான் ஒரு விஷயம் சொல்லுவேன்.
பயப்படாம கேளு."
அகல்யா எந்த உணர்வும் காட்டாமல் அவன்
சொல்லப்போகும் அதிர்ச்சிக்குத் தன்னைத்
தயார் செய்து கொண்டாள்.
"அகல், நேத்திக்கி நீ தூங்க போன உடனே
மாடிக்கு போனேன் இல்லையா ... அப்போ ...
அப்போ ... அகல். நான் நீ சொன்னத நம்பறேன்.
நம்ம வீட்டுல எதோ தப்பு இருக்கு"
"மாடில என்ன பாத்தீங்க நிதின் அப்படி?"
"வேணாம் அகல் ... கேக்காத"
"நிதின், நீங்க என்னன்னு சொல்லலைன்னா தான்
எனக்கு இன்னும் பயம்மா இருக்கு. ப்ளீஸ்
சொல்லுங்க"
"டேக் இட் ஈசி .... நான் மாடிக்கு போய் கதவ
தெறக்கலாம்னு பார்த்தா, கதவு தெறந்து கெடக்கு.
மெய்ன் ரூமுல லைட் போட்டு இருக்கு. டோர்
கண்ணாடி முன்னால இருக்கற பெட்ல யாரோ
ஒரு வயசான பெரியவர் படுத்திருக்கற மாதிரி
ஒரு உருவம் பாத்தேன். பக்கத்துல போய்
பார்த்தா யாரும் இல்ல.என்னடா இதுன்னு
லைட் போட்டேன். அப்போ, கீழ ஒரு
சின்ன பொண்ணு பாடு பாடற சத்தம் வேற
கேட்டுச்சி ... நான் பயந்து ஓடி வந்துட்டேன். "
"நிதின் ... நாம இந்த வீட்ட வாங்கும் போது
என்ன வருஷம் இருக்கும்?"
சுமன் எழுந்தான்.
"இன்னைக்கு சண்டே தானே?" என்றவன்
பாத்ரூம்(அறைக்கு) சென்றான்.
"அகல், இந்த வீடு நாம வாங்கி ஆறு வருஷம் ஆச்சு. என்ன,
இந்த வீட்டுல பேய் இருக்குன்னு பயப்படறியா?" அவன்
அலட்சியமாய்ச் சிரித்தான்.
"அப்படின்னு இல்ல நிதின், சும்மா கேட்டேன்.
இருந்தாலும் ரெண்டு பேருக்கும் எதோ ஒரு
எக்ஸ்பீரியன்ஸ் ஆகி இருக்கு. எனக்கு தெளிவா
சொல்லத்தெரியல நிதின். ஆனா, யாரோ
என் பின்னாடி வந்து நின்னது நிஜம், நான்
திரும்பி பார்த்திருந்தா இவ்வளவு கொழப்பம்
இல்ல .... ஆனா "
சொல்லி முடிப்பதற்குள்
"அம்மாஆஆஅ ...." என்று ஒரு சத்தம்.
அகல்யாவும் நிதினும் சத்தம் கேட்ட திசைக்கு
ஓடினார்கள்.
சுமன் பாத்ரூம் கண்ணாடி முன்பு விழுந்து
கிடந்தான். தரையெல்லாம் டூத் பேஸ்ட்
சிதறிக்கிடக்க அரைமயக்கத்தில் இருந்தான்.
லேசாக வலிப்பு வந்தது. சுமனுக்கு மூன்று
வருடமாக வலிப்பு வ்யாதி உண்டு. அதுவும்
வித்தியாசமாக, மயக்க நிலையில் உண்டு,
அதிர்ச்சி காரணமாக வரும் பார்வோவைராஸ்
வலிப்பு.
அகல், ஷர்மாவுக்கு போன் போடு. ஹர்ரி அப்.
மூன்று முறை டயல செய்தவள் ...
"நிதின், ஷர்மா, வாசு யாரும் போன் எடுக்க
மாட்டேங்குறாங்க.
நிதின் சுமனை தன் நர்சிங் அறைக்கு
கூட்டிச்சென்றான்.
"அகல், வெளிலே வெயிட் பண்ணு. "
வலிப்பு பிரீக்வேன்சீ குறைந்து தலை மட்டும்
லேசாக ஆடிக்கொண்டிருந்தது.
"நிதின், ப்ளீஸ் நானும் உள்ள வரேன்னே ... "
"அகல், என் ட்யூடிய செய்ய விடு ... வெயிட்
அவுட்சைட்"
பச்சை வெல்வட் திரை மூடப்பட்டது,
ஹாலோஜென் நூறு வாட்ஸ் பல்ப் போடப்பட்டது.
இளம் சூட்டில் இருந்த வெந்நீரில் பஞ்சை
நனைத்து அவன் கைப்பட்டையை அழுத்தினான்.
மீதிப் பஞ்சு ரோலை அவன் நாக்கின் இடது புறம்
தள்ளினான். நெஞ்சை ஒரு முறை லேசாக
அழுத்தினான்.
அந்த அறையில் பதிமூன்று நிமிடங்களுக்கு
மௌனம்.
"சுமன் ... சுமன் ,,, "
கொஞ்சம் கொஞ்சமாக வலிப்பின் தீவிரம்
குறைய, ஏழு நிமிடம் கழித்து லேசாக கண்
விழித்துப்பார்த்தான்.
"சுமன், ஆர் யூ ஆள் ரைட். "
" டாட் " என்றவன் வாயைத்துடைத்துக்கொண்டான் ....
பஞ்சு கீழே விழுந்தது.
"டாட் ... என்ன ஆச்சு? எதுக்கு உங்க
நர்சிங் ரூமுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?"
"சுமன் ... " என்று ஆரம்பித்தவன் "நத்திங் சுமன்"
என்று முடித்துக்கொண்டான்.
"டாட் ... சொல்லுங்க?"
"சுமன் ... ஒன்னு சொல்லறியா? பாத்ரூமுல
என்ன ஆச்சு?"
"எந்த பாத்ரூமுல ... ஏன் ... "
நிதின் அதற்கு மேல கேட்க வில்லை. ஞாபகம்
இல்லாத விஷயத்தைக்கிலறி குழப்ப வேண்டாம்
என்று வெளியே வந்தான். மனோதத்துவன்.
"ஹி இஸ் பைன் நவ் ... அகல், அவன் கிட்டே
எதுவும் கேட்காத"
அகல்யா அதற்குள் பாதி அழுது முடித்திருந்தாள்.
"நிதின், எனக்கு ரொம்ப பயமா இருக்கு நிதின் ...
நேத்திக்கி நான், நைட் நீங்க, இப்போ சுமன் ...
என்ன நடக்குது நிதின், ஒன்னும் புரியல ...
நிதின் பதில் சொல்லாமல் பாத்ரூமுக்கு
சென்றான். லைட் அணைந்திருந்தது.
பாத்ரூம் சுவர்கள் மரத்தால் ஆனவை, மேல்
சுவரில் குருவி முட்டை அளவுக்கு ஓட்டை
விழுந்திருந்தது. பிளஷ் செய்து பார்த்தான்,
வேலை செய்தது. ஹீட்டரை போட்டு பார்த்தான்.
பனிக்காலம் என்பதால் சூடாக நேரமெடுத்தது.
கழுத்தை ஒரு சொடக்கு போட்டான். ஒரு முறை
தன்னையே சுற்றினான். பெல்டை லூசாக்கினான்,
பெல்டை போட்டடுக்கொண்டான். லைட்டை
அணைத்தான். வெளியே வரும் பொது தான்
கவனித்தான்.
"வாட் ... வாட் தி ஹெல் ... அகல் சீக்கிரம்
வா ... அகல் .... அகல் ... "
அவள் பதில் சொல்லவில்லை ... இவன்
அதிர்ச்சியான அதே நிமிடம், பின்னால்
இருந்து பார்த்த அவளுக்கும் அதே வியப்பு.
டப் ... டப் . டப். குழாய்த் தண்ணீர்
நிற்கவில்லை. அதிர்ச்சிக்கு காரணம் அதுவல்ல.
கண்ணாடி பாதி உடைந்திருந்தது.
"அகல், இது எப்படி ஆச்சு ... நேத்திக்கே
இப்படித்தான் இருந்திச்சா, இல்ல இப்பத்தான்
உடைந்சுதா?"
"டாட் ... நான் உள்ள வரும் போதே
உடைஞ்சு தான் இருந்திச்சு"
"சுமன் ..." அவள் அவனிடம் கேட்க
நினைத்தவள் நிதினின் சைகையைப்பார்த்து
நிறுத்தினாள்.
இரவு மழை வந்ததால் கரெண்ட் போனது.
நிதின் எல்லாக்கதவையும் பூட்டினான்.
"அகல், மெழுகு இருக்கா ... ?"
"அகல் ... "
"என்ன நிதின் ... "
"என்ன அகல் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்
பதில் பேசவே மாட்டேங்குற?"
"நிதின், கண்ணாடி உடைஞ்சத பாத்தோமே,
அப்போ மீதிக் கண்ணாடில நம்ம உருவத்த
பார்த்தீங்களா?"
பிளாஷ் .......... இப்படித்தான் இருந்தது
அந்த கேள்வி.
"வாட் ... ரிபீட் பண்ணு ... யூ மீன்
கண்ணாடில நம்ம இமேஜ் விழலயா? அகல் ,
ஆர் யூ சுயர்?"
மெழுகு கிடைக்கவில்லை. சுமன் ஓரமாக
உட்கார்ந்து கொண்டு மேலே வெற்றாய்
பார்த்துக்கொண்டிருந்தான்.
"அகல் ... இங்கே வா ... சுமன்,
இங்கேயே இரு ..."
"டாட் ... நானும் வரேன் ... எனக்கு
பயமா இருக்கு .... "
மூவரும் மெல்ல பாத்ரூமை நெருங்கினர்.
"குழாய்த் தண்ணீர் நிற்கவில்லை ... கண்ணாடி
சரியாக இருந்தது இப்பொழுது. உடைந்த மாதிரி
இல்லை.
கண்ணாடிக்கு பக்கத்தில் செல்ல யாருக்கும்
மனமில்லை.
"அகல் அந்த லைட்டர எடு ... "
"லைட்டர் காணும் நிதின், தேடிக்கிட்டு
இருக்கேன் ... "
இருட்டில் எதோ ஒரு உருவம் கண்ணாடியில்
அசைவது தெரிந்தது.ஆனால் யார் என்று
தெரியவில்லை.
"டாட் எனக்கு பயமா இருக்கு ... ஹாலுக்கு
போவோம், இங்க இருக்க வேண்டாம்"
"அகல், அவன கூட்டிட்டு போ ... நான் என்னன்னு
பார்த்துட்டு வந்திடறேன்"
அவர்கள் அங்கிருந்து கிளம்பினாலும் கண்ணாடியில்
எதுவும் அசைந்த மாதிரி இல்லை. ஐந்து
நிமிடம் அங்கிருந்தவன் நகர்ந்தான்.
"அகல், நீங்க ரெண்டு பேரும் தூங்குங்க. நான்
கொஞ்சம் ஸ்டடி பண்ணனும்.
"நிதின், நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா? "
"ம்ம்ம் "
"இல்ல ... ஒண்ணுமில்ல ... "
அவன் அவள் கேள்வியை எதிர்பார்க்காமல்
வாசலுக்குச் சென்றான்.அகல்யாவும் சுமனும்
படுக்கை அறைக்குச் சென்றார்கள்.
வாசலில் நல்ல மழை. அதற்குள் ரோடெல்லாம்
தண்ணி ஆகிவிட்டது. இருட்டு, பயங்கர இருட்டு.
தூரத்தில் ஏதோ ஒரு ஜீப் ஹெட் லைட் மட்டும்
தெரிந்தது. நிதின் இப்பொழுது கொஞ்சம் தனிமையை
எதிர்பார்த்தான். மாடியில் ஏதோ வெளிச்சம்
தென்பட்டது. இடியில் அந்த வீடே அரை
கணம் குலுங்கியது.
நேற்று கீழே அவசரத்தில் விழுந்த ஏணியைத்
துடைத்தான்.
முதல் படி ... டப் ... இரண்டாவது ...
டப் .... மூன்றாவது வைக்கும் மாடியிலிருந்து
யாரோ கீழே இறங்கி வருவது தெரிந்தது.
ஆ .... அலறி அடித்து வீட்டிற்குள் ஓடினான்.
கதவு திறக்கவில்லை.
டக் ... அகல் ... கதவத் தற ... உள்ளிருந்து
ஒரு சத்தமும் இல்லை. அந்த உருவம் கடைசி
படி இறங்கியது. பேய் மழையில் எதிரில்
இருக்கும் கொஞ்ச வெளிச்சமும் வழக்கிழந்தது.
ஒரு பெண் பாடும் சத்தம் லேசாகக்
கேட்டுகொண்டிருக்க பின்புறம் உள்ள புதர்
காட்டில் ஓடத் தயாரானான். சகதி,
யூக்கலிப்டஸ் வாசனை, பளீர் மின்னல்,
முள் மரம், மர அட்டை எதுவும் அவனை
பாதிக்கவில்லை.
சுமன் பாதி தூக்கத்தில் கண் விழித்தான்.
பக்கத்தில் கை வைத்துப் பார்த்தால்
அகல் அங்கே இல்லை.
"அம்மா ... டாட் ... அம்மா ... எங்கம்மா
இருக்கீங்க?டாட் ... அம்மா யாரோ
பாடராங்கம்மா ... எனக்கு பயமா
இருக்கும்மா ... டாட் ... "
அவன் மெதுவாக வாசலுக்குச் சென்று
கதவைத் திறக்க முற்பட்டான்.
"தாத்தா, சொன்னா நம்பல இல்ல ... பாருங்க
நான் கதவு திறக்கறேன் ... தெறக்கவே மாட்டேங்குது."
லொக் ... லொக் ...
"நீ மொதல்ல பாடறத நிறுத்து"... சுமன் இந்த
காட்சிகளைப்பார்த்தவன் மயங்கி விழ அகல்யா
நிதினைத் தேடி காட்டுக்குச் செல்ல அந்த இரண்டு
உருவங்களும் பாத்ரூமுக்குச் சென்றன.
"என்ன ஒளர்ற ... குழாயில தண்ணீ தான்
நின்னுடிச்சு இல்ல? "
"இல்ல தாத்தா ... சரி நீங்க சொன்னா
நம்ப மாட்டீங்க ... " என்று மீண்டும் பாட
ஆரம்பித்தாள்.
இப்படி எல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால்
நிதின் கொஞ்சம் மெதுவாகச் சென்றிருப்பான்.
ஜீப் 20 - 30 - 45 - 50 என வேகத்தைக் கூட்டி,
வளைவுகளைச் சமாளித்து காற்றைக் கிழித்தது
தொம்ம்ம்ம்ம்ம் ....
உடைந்த ஜீப்பிலிருந்து எஞ்சியது அவர்களின் ஆவி
மட்டுமே ...
வீடு வந்தது.
"டாட் , என்ன ரொம்ப டயர்டா இருக்கீங்க ... "
"இல்லடா ... ஒரே மயக்கமா இருக்கு ... நம்ம
டூர் போடோஸ் பாக்கணும் ... காமெராவ எடு"

Subscribe to:
Posts (Atom)